உலகில் அதிக சைபர் தாக்குதல்கள்

  -டெல்லி 5 வது இடம்”-சுபெக்ஸ் அறிக்கை

இந்தியாவில் தடுப்பூசிகளின் திறன்கள் மற்றும் தடுப்பூசிகள் தயாரிக்கும் ஆலைகள் பற்றி அறிய ஆர்வம் காட்டும் ஹேக்கர்கள். இதனால் உலகில் அதிகப்படியான சைபர் தாக்குதல்களை எதிர்கொண்ட நகரங்களில் டெல்லி 5 ஆவது இடம்.

பெங்களூரை மையமாகக் கொண்ட இந்திய IT நிறுவனமான சுபெக்ஸின் புதிய அறிக்கையின்படி, கடந்த 2020ஆண்டு இந்தியாவின் இணைய சொத்துக்கள் மீதான தாக்குதல்கள் 207% அதிகரித்துள்ளன, எனவே உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சைபர் தாக்குதல்களை எதிர்கொண்ட நகரங்களில் டெல்லி ஐந்தாவது இடத்தில் உள்ளது.

முதல் நான்கு நகரங்களில் வாஷிங்டன் டி.சி, லண்டன், நியூயார்க் சிங்கப்பூர் உள்ளன. மேலும் இந்தியாவின் தடுப்பூசி உற்பத்திகளில் ஹேக்கர்கள் ஆர்வம் காட்டுவதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் நெட்வொர்க் சேவை இயக்குநர் கிரண் சக்கரியா இதைப்பற்றி கூறுகையில்,”இந்திய உற்பத்தி ஆலைகள் மீதான தாக்குதல்கள் 91% அதிகரித்துள்ளது, ஹேக்கர்கள் இந்திய தொழில் நிறுவனங்களின் IP டேட்டா தகவல்களை சீர்குலைத்தலை குறிக்கோளாகக் கொண்டிருகின்றனர்.

இதன்மூலம் இந்தியாவில் தடுப்பூசிகளின் உற்பத்தி திறன்கள் மற்றும் தடுப்பூசிகளுடன் தொடர்புடைய உற்பத்தி ஆலைகள் பற்றி அறிய ஹேக்கர்கள் ஆர்வம் காட்டுவது உறுதியாகியுள்ளது.

இது நாட்டின் உற்பத்தித் துறையை கண்காணித்து, பின் தாக்குதல் நடத்துவதற்கு செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாகத் தெரிகிறது. எனவே இந்தியாவில் டிஜிட்டல் நெட்வொர்க்கின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here