சுற்றுச்சூழலை காக்க கூகுள் மேப்பில் புதிய அப்டேட்..!

கூகுள் நிறுவனம் தற்போது சுற்றுச்சூழலை காக்க ஓர் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பல தரப்பினரிடம் இருந்து வரவேற்பை பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் வாகன ஓட்டுர்நகளால் பயன்படுத்தப்படும் கூகுள் நிறுவனத்தின் முக்கிய செயலில் கூகுள் மேப். கூகுள் மேப் மூலமாக உலகின் எந்த மூலையிலும் வாகனங்கள் பயணிக்க வசதி செய்து தரப்படும்.
சாட்டிலைட் தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் கூகுள் மேப் கொண்டு கார் டிரைவர்கள் பலர் பயனடைந்து வருகின்றனர்.
தற்போது உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம், கரியமில வாயுவின் அதிகரிப்பு, துருவப் பகுதிகளில் பனிப்பாறை உருகுதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தவிர்க்க உலக நாடுகள் பல, பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தை இட்டு வருகின்றன.
புகழ்பெற்ற பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் வல்லரசு நாடுகள் பல கையெழுத்திட்டுள்ளன. தனியார் நிறுவனங்களும் இயற்கை வளத்தையும் சுற்றுச் சூழலையும் காக்க ஆவண செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
புதிய அம்சம்இந்நிலையில் கூகுள் நிறுவனம் பருவநிலையை பாதுகாக்க கூகுள் மேப் செயலியில் ஒரு புதிய அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது. பொதுவாக கூகுள் மேப்பில் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்ல வழி கேட்டால் இரண்டு, மூன்று வழிகளை காண்பிக்கும். இவற்றுள் சிறந்த வழி எது என்று கூகுள் மேப் செயலி தேர்வு செய்து அதனை நமக்கு சிபாரிசு செய்யும்.

தற்போது பருவநிலை மாற்றத்தை தவிர்க்க அதிக வாகன புகை, சுற்றுச்சூழல் சீர்கேடு இல்லாத வழியை காண்பிக்க கூகுள் மேப் செயலியில் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழியாக பெரும்பாலான வாகனங்கள் பயணித்தால் பல இடங்களில் அதிக புகை வெளியீட்டை தவிர்க்கலாம்.

குறிப்பிட்ட ஓரிடத்தில் அதிக வாகனங்கள் தேங்குவதால் கார்பன் அளவு அதிகமாகிறது. இதனை தவிர்ப்பதற்காகவே இந்த திட்டத்தை கொண்டு வந்ததாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூகுளின் பருவநிலையை காக்கும் இந்த முன்னெடுப்பு வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here