தென்கிழக்காசிய நாடுகளுடன் முக்கிய ஒப்பந்தம் !

-இ(உ)றுதி செய்தது இந்தியா..

 இது  – சீனாவுக்கு செக்..! 

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று 17’ ஆவது பிம்ஸ்டெக் (பல துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முயற்சி) அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தெற்கு, தென்கிழக்கு ஆசியாவை இணைக்கும் தனித்துவமான வலிமையை பிம்ஸ்டெக் கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.

பிம்ஸ்டெக் என்பது தெற்காசியா,  தென்கிழக்கு ஆசியாவின் ஏழு நாடுகளின் சர்வதேச அமைப்பாகும். இதில் 1.5 பில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இது உலக அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 3.5 டிரில்லியன் எனும் அளவில் (2018) கொண்டுள்ளது.

“இது எங்கள் வெளியுறவுக் கொள்கையில் படிப்படியாக முக்கியத்துவம் பெற்றது. மே 2019 இல் எங்கள் அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவில் பிம்ஸ்டெக் தலைவர்களின் பங்கேற்பு அதற்கு ஒரு சான்றாகும்” என்று அவர் மேலும் கூறினார்.

“உறுப்பு நாடுகளிடையே வளர்ந்து வரும் பொருளாதார, அரசியல் ஒத்துழைப்புடன் இப்பகுதி விரைவான பொருளாதார வளர்ச்சியைக் கண்டிருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

மக்கள், பொருட்களின் சுமுகமான எல்லை தாண்டிய இயக்கத்துடன் பிராந்தியத்தின் பொருளாதார ஒருங்கிணைப்புக்கு வலுவான இணைப்பு ஒரு அத்தியாவசிய முன்நிபந்தனையாகும்.

போக்குவரத்து இணைப்பிற்கான பிம்ஸ்டெக் மாஸ்டர் திட்டத்தை உறுப்பு நாடுகள் இறுதி செய்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்று ஜெய்சங்கர் கூறினார்.

பிம்ஸ்டெக் நாடுகளிடையே தரைவழி மற்றும் கடல்வழி போக்குவரத்தை வலிமைப்படுத்தும் விதமாக, இந்தியாமீன் முன்முயற்சியில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டம் இறுதி செய்யப்பட்டதால், இனி போக்குவரத்து எளிதாகும்.

இதன் மூலம் வர்த்தகமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது தென்கிழக்கு ஆசியாவில் சீனாவின் பொருளாதார பலத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஜனவரி மாதம், பிரதமர் நரேந்திர மோடி, ‘பிரராம்ப்: ஸ்டார்ட்அப் இந்தியா சர்வதேச உச்சி மாநாட்டை வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றியபோது, ​​பிம்ஸ்டெக் நாடுகள் இந்த நூற்றாண்டை ஆசியாவின் நூற்றாண்டாக ஆக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும். ஏனெனில் அவர்கள் மனிதவளத்தில் உலகின் ஐந்தில் ஒரு பங்கு மற்றும் 3.8 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வலிமையைக் கொண்டுள்ளனர்.

இந்த நூற்றாண்டு டிஜிட்டல் புரட்சி, புதிய கண்டுபிடிப்புகளின் ஒரு நூற்றாண்டு. இது ஆசியாவின் நூற்றாண்டு ஆகும். எனவே, எதிர்கால தொழில்நுட்பமும் தொழில்முனைவோரும் இப்பகுதியில் இருந்து வர வேண்டும் என்பது நமது கோரிக்கையாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here