பெஞ்ச் பெரியசாமியின் அலசல்
-ஆண்பாதி பெண்பாதி என்பது உண்மையா?
திருமணத்திற்குபின் வேலைக்குசெல்லாமல் இல்லத்தரசிகளாக இருக்கின்றவர்களுக்கு கணவனின் வருமானத்திலிருந்து 25 விழுக்காடு மனைவியின் கணக்கில் சேர்க்கப்படவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேறினால் இல்லத்தரசிகள் தங்கள் தேவைகளுக்கு கணவரிடம் கையேந்தும் சூழல் ஏற்படாது.
பெரும்பாலான இல்லத்தரசிகள் ஏதாவது கிடைக்கும் என்று கணவனின் அறுவடைநாள் வரை காத்திருக்கின்றனர். அறுவடைநாள் வந்தும் தங்கள் மனைவியருக்கு பணம் ஒதுக்கவேண்டும் என்று பல கணவன்மார்கள் நினைப்பதே இல்லை.
அப்படியே செலவுக்குக் கேடடாலும் ” அதான் எல்லாம் வாங்கி போடறேனே ! இன்னும் என்ன” என்று முகத்தில் அறைந்தாற்போல் பதிலும் வரும். இதற்காவே மனைவியர் எதையும் கேட்க முடியாதவர்களாய் இருந்துவிடுகின்றனர்.
சில கணவன்மார்கள் குறிப்பிட்ட தொகை தருவதுண்டு. சில வேளைகளில் அது போதாமலும் போய்விடுவதுண்டு. அச்சமயத்தில் மீண்டும் எதிர்ப்பார்ப்பது அர்த்தமற்றதாகிவிடும். அல்லது எதற்கு வம்பு என்று இருக்கின்ற இல்லாத்தரசிகளும் உண்டு.
இன்னும் சிலர் தங்கள் கடன் அட்டையைக் கொடுப்பதும் உண்டு. ஆனாலும் அதிலும் கெடுபிடி இருக்கும். எல்லை தாண்டிவிட முடியாது. பார்த்துப்பார்த்து செலவு செய்ய வேண்டும்.
இல்லத்தரசிகள் எப்போதுமே எதிர்பார்க்கின்றவர்களாகத்தான் இருப்பார்கள். இருக்கின்றார்கள் என்பதற்கு எந்த மறுப்பும் இருக்காது. அவர்களின் பரிதாபம் வெளியில் தெரியாது. பல வேளைகளில் கணவன்மார்களுக்கும் அவர்களின் சங்கடம் புரியாது. சமயம் அறிந்து கேட்டாலும் திட்டு இல்லாமல் கிடைக்காது. அப்போது கிடைப்பதும் நிறைவாக இருக்காது. இதில் ஆண்பாதி பெண்பாதி என்றால் அது வெறும் சும்மா தானே!
இதற்கெல்லாம் ஒரே தீர்வு மாத வருமானத்தில் 25 விழுக்காடு இயல்பாகவே மனைவியின் கணக்கில் சேர்ந்துவிட வேண்டும் என்ற நிலைப்பாடு சட்டமாக இருக்குமானால் நிலைமை நன்மையானதாக இருக்கும். இதில் வேலை பார்க்கும் மனைவிமார்கள் சேர்க்கப்படத் தேவையில்லை.
இல்லாதரசிகளிடம் இருக்கின்ற பனம் வீணாக்காது. அதை எப்படிக் கரப்பது என்ற வித்தை கணவன்மார்களுக்குத் தெரியும். இந்த சமயத்தில் நேரத்தில் மனைவியிடம் கையேந்தும் நிலை கணவன்மார்களுக்கு நேரலாம். இல்லத்தரசிகள் ஏமாந்தும் போகலாம். அவர்களுக்குக் கையில் வைத்துக்கொண்டு பொய் சொல்லத்தெரியாதே!
இதனால் குடும்பத்தின் குழப்பம் அதிகம் இல்லாமல் சாராம்சம் ஆகிவிடலாம். கணவன்மார்களை சிறப்பாகக் கவனிக்கும் மனைவியராகவும் இல்லத்தரசிகள் மாறிவிடுவர். இதனால் குழந்தைகளுக்குத் தேவையானதையும் அவர்களால் வாங்கிக்கொடுக்க முடியும்.
குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தரக்கூட முடியாதவர்கள் இருக்கின்றார்கள் என்பதைவிட, நொந்துபோகின்ற இல்லத்தரசிகளே அதிகம் என்பதற்கு ஆய்வுகள் தேவையில்
லை.
அந்த நேரத்தில் குழந்தைகளைச் சமாதானப்படுத்துவதற்கு தனி தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்.
கணவன்மார்கள் மனைவியரின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றத்தெரிந்தவர்களாக இருந்தால் குடும்பம் பலகலைக்கழகம்தானே!
எது எப்படி இருந்தாலும், கணவன்மார்களின் ஆனாவசிய செலவுகளைக் குறைக்க 25 விழுக்காடு வருமானத்தை மனைவியின் கணக்கில் சேர்ப்பதால் நன்மைகள் அதிகம்.
-கா.இளமணி