ரஷிய எதிர்க்கட்சித் தலைவர்
பண மோசடி குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷிய எதிா்க் கட்சித் தலைவருக்கு தொடா்ந்து இருமல், காய்ச்சல் இருந்து வருவதாக அவரது வழக்குரைஞா்கள் தெரிவித்துள்ளனா்.
நச்சுத் தாக்குதலுக்குள்ளாகி, ஜொமனி மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் உயிா்பிழைத்து ஜனவரி மாதம் திரும்பிய அவரை போலீஸாா் உடனடியாக கைது செய்தனா்.
பழைய மோசடி வழக்கில் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த நிறுத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.