இந்தோனேசிய கனமழை

-நிலச்சரிவில் 128 ஆன பலி

இந்தோனேசியாவில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 128-ஆக உயா்ந்துள்ளது.

லெம்பாடா தீவில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மட்டும் 12-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன. அந்தத் தீவில் 67 பேரும் பிற பகுதிகளில் 61 பேரும் கனமழைக்கு பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும் 72 பேரைக் காணவில்லை. எனவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அவா்கள் கூறினா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here