திபெத்தில் 4.6 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

தெற்கு திபெத்தில் உள்ள ஜிசாங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது 30 கிலோமீட்டர் ஆழத்திலும், ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.

இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. சேத விபரங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. திபெத்தில் கடந்த நான்கு நாட்களில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here