தடுப்பூசி தட்டுப்பாடு” இதுதான் ஒரே வழி

-ரஷ்யாவுடன் கைகோக்குமா ஜெர்மனி..?

தடுப்பூசி தட்டுப்பாட்டை குறைப்பதற்காக ஜெர்மனி ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசியின் தட்டுப்பாட்டை குறைப்பதற்காக ஜெர்மனி ஒரு முடிவை எடுத்துள்ளது. அது, ஸ்புட்னிக் வி தடுப்பூசியை ரஷ்யாவிடமிருந்து நேரடியாகப் பெற்றுக் கொள்வது என்பதாகும். 

மேலும் அது சம்பந்தமாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த போவதாகவும் கூட்டம் ஒன்றில் ஜெர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் Jens spahn ஐரோப்பிய சுகாதார அமைச்சர்களிடம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகள் ஒழுங்குமுறை அமைப்பு ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கும் வரை தடுப்பூசி வாங்கப் போவதில்லை என்றும் ஜெர்மனி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

கமெண்ட்: இருவழி  ஒத்துப் போகவில்லையென்றால்  எதற்கு இறங்கிப்போகணும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here