செமினி தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் இல்லம் தோறும் மக்கள் ஓசை

 

 

செமினி,
செமினி தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் இல்லம் தோறும் மக்கள் ஓசை பள்ளி தோறும் இன்பத்தமிழ் பயணத்தில் ஒன்றிணைவோம் எனும் திட்டம் தொடங்கப்பட்டது.

மாணவர்கள் சிறந்த தேர்ச்சியடைய முதல்கட்டமாக மார்ச் மாதம் மலேசிய சமூக ஒற்றுமை மற்றும் கலாச்சார மன்ற தேசிய துணைத் தலைவர் ஆ. சக்திவேல் இதனைத் தொடக்கிவைத்தார்.

செமினி தமிழ்ப்பள்ளியில் மாணவர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை குறிப்பாக நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக மக்களும் நாளிதழை இலவசமாக வழங்க முன்வந்துள்ளனர்.

நாட்டில் நாம் காப்பற்ற வேண்டிய முக்கிய சொத்துகளில் நமது தமிழ் நாளிதழும் ஒன்று என சமூக ஆர்வலர் ஆ. சக்திவேல் தெரிவித்தார்.

நமது தமிழ் நாளிதழ்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இலவசமாக வழங்க ஜோன் முன்வந்துள்ளார்.

இதனையடுத்து இங்குள்ள மாணவர்களின் கற்றல் கற்பித்தலில் மேம்பாடடையும் தேர்வுகளில் நல்ல தேர்ச்சி பெறவும் எதிர்காலத்தில் தன்னாற்றல், நன்னெறி போன்ற திறன்மிக்க தலைமைத்துவத்தை அடையவும் என்கிற நம்பிக்கை அடிப்படையில் இல்லந்தோறும் மக்கள் ஓசை பள்ளி தோறும் இன்பத்தமிழ் எனும் கருப்பொருளுடன் தமிழ்ப் பள்ளியைக் காப்போம் எனும் முறையில் தமிழ்ச்சேவை ஆற்றி வருகிறார்.

தற்போது ஒரு நாளைக்கு ஐந்து இதழ்கள் என 7 மாதங்களுக்கு இச்சேவையை ஜோன் தொடர்கிறார்.

ஆ. சக்திவேல் மக்கள் ஓசை விற்பனைப் பிரிவு அதிகாரி சு. கந்தப்பிரியனிடம் இல்லம் தோறும் மக்கள் ஓசை பள்ளிதோறும் இன்பத்தமிழ் பயணத்தில் ஒன்றிணைவோம் எனும் திட்டத்தின் விண்ணப்பபாரத்தை வழங்கினார்.

 

எம். அன்பா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here