பெஞ்சமின் பெரியசாமியின் பெரிய அலசலும் -ஆலோசனையும்

கொரோனா- இந்த வார்த்தை சாதாரணமானது. ஆனால் இதன் தாக்கம் மோசமானது.

மக்கள் ஊடே இச்சொல் பிரபல்யமாய் ஐக்கியாகிவிட்டது மட்டுமல்ல, வாழ்க்கையில் புதிய அத்தியாயங்களுக்கு வழி காட்டியிருக்கிறது என்றும் கூறமுடியும்.  எப்படியும் வாழலாம் என்பது இனி முத்தாய்ப்பாக இருக்காது.

மக்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்று அரசாங்கத் திட்டங்களைப் புரட்டிப்போட்டிருக்கிறது கொரோனா. இன்று கொரோனாவைப் பின்பற்றித்தான் அரசின் நடவடிக்கைகள் இயங்குகின்றன. செயல்படுகின்றன. தொடர் திட்டங்கள் அமைக்கப்படுகின்றன.

மக்களுக்கான திட்டங்களை அமல்படுத்துவதில் தேக்கம், இயலாமை ஏற்பட்டிருக்கிறது. கொரோனாவின் பாதிப்பை ஒட்டியே அரசு திட்டங்களை அறிவிக்க, புதுப்பிக்க வேண்டியிருக்கிறது.  

உலகின் இயக்கம் கொரோனாவின் பிடியில் இருக்கிறது. இதனால் உலகப்பொருளாதாரம் கேள்விக்குறியாய் வளைந்து புள்ளியிட்டிருக்கிறது.

மலேசிய நாடுm அதில் ஒன்றாகத்தான் இருக்கிறது. கொரோனா இன்னும் நம் கட்டுக்குள் வசப்படவேயில்லை என்பது மிகத்தெளிவாகத்தெரிகிறது.

 

முயற்சிகளுக்கு சவால் விடும் அளவில் நம்மைச் சீண்டி விளையாட்டு காட்டும் கொரோனாவின் அழிவு காலம் எப்போது?

இன்னும் இதற்கான விடை முழுமைப் பெறவில்லை. விடை கிடைப்பதும் எளிதல்ல. காரணம் கொரோனா உருமாற்றம் விரிவடைந்துகொண்டே போவதை யாரும் அறுதியிட முடியவில்லை என்பதுதான். 

ஆய்வுகள் எல்லாம் கோரோனாவைச் சுற்றியே  அனுபவம் காட்டுகின்றன.  அடுத்து வருவதை அனுமானிக்கின்றன. வேறு வழியின்றி திணறுகின்ற காட்சிகல் தான் முன் நிற்கின்றன. 

 

மூன்றாம் அலை பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறது ஓர் ஆய்வு. நான்காம் அலை மிகவும் மோசமானது, அதற்கு வித்திடக்கூடாது என்கிறது மற்றோர் ஆய்வு. 

இராண்டாம் அலையோடு முடிவு கட்ட முடியவில்லை என்பது பலவீனம், அதையும் தாண்டி  மூன்றாம் அலை வீசத்தொடங்கி விட்டது.  நான்காம் அலை வாராது என்பதற்கும் உத்திரவாதம் ஏதும் இல்லை. தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சுகாதாரத்துறைகளின் அளப்பரிய முயற்சிகளை அலட்சியப்படுத்திவிடவும் முடியாது.  அதற்கான செலவுகள் நீராய் ஓட்டிக்கொண்டிருக்கின்றன. இமாலய முயற்சிகளால் சோர்வுதான் ஏற்படுகிறது. இதைத்தான் பிரதமர் கோடி காட்டியிருக்கிறார். 

கோடி காட்டுவதை விட, அதற்கான உறுதியான நடவடிக்கைதான் என்ன? 

எவர் சொன்ன கருத்தாயினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதுபோல டுரியான் துங்கால் சட்டமன்ற உறுப்பினர்  முகமட் சோபி அப்துல் வகாப் கூறிய கருத்தையும் கொஞ்சம் ஆலோசிக்கலாமே!

அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் அலோசனை ஏற்புடையதுதானே! பல துறைகளுக்கு வேலை இல்லை. செலவுகள் மட்டும் மூக்கைத்தொடுகின்றன. தண்டச் செலவு என்றும் கூறிவிட முடியும்.

இதற்கு அத்துறை சார்ந்தவர்களே முன்னின்று பின் வாங்கினால் செலவுகள் மிச்சப்படும். இதற்கு தன்னிலை உணர்தல் என்றும் கூறலாம்.

செயல்படாதத் துறையில் உள்ளவர்களை வேறு துறைக்கு உதவியாக மாற்றலாம். துணை அமைச்சர்கள் தங்கள் தொகுதிக்குப்போய் காரியம் ஆற்றலாம் . இவர்களுக்கான ஆத்தியாவசிய செலவுகளாவது மிஞ்சும்.

பல துறைகளில் செயல்பாடுகளே இல்லை என்பது வெளிப்படையான உண்மை. நாடாளுமன்ற கூட்டங்களில் எண்ணிக்கை குறைக்கப்பட்டும் வழி நடத்தல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படியானால் வழி நடத்த பெரும் கூட்டம் தேவையில்லை  என்பது உறுதியாகத் தெரிகிறது.

நாட்டின் சுகாதாரப் பிரிவுக்கே கூடுதல் வேலை.  மற்றவை தேவைக்கேற்ப அமைவதாகும் .கையிருப்பைக் கூட்டாமல் செலவுகளுக்கு ஆர்வம் காட்டுவது எப்போதுமே ஆபத்தாகவே முடியும்.

ஆதலால் அமைச்சரவையை சுருக்கி. செலவினங்களைக் கட்டுப்பாடுத்தினால் மட்டுமே கொரோனாவை நான்காம் அலைக்குப் போகவிடாமல் தடுக்க  முடியும்!

 

  • கா.இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here