கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை !!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோன 2 ஆவது அலை ரவத் தொடங்கியுள்ள நிலையில்,தமிழக அரசு இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது.

அதன்படி அனைத்து தியேட்டர்களிலும் 50% இருக்கைகள் மட்டும் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதே போல் ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50% மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கும், இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உணவகங்கள், தேநீர் விடுதிகளில் 50% இரவு 11 மணி வரை உணவருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளில் இருக்கைகளில் மட்டும் உட்கார்ந்து செல்ல அனுமதி, டாக்ஸியில் ஓட்டுநர் சேர்க்காமல் 3 பேர், ஆட்டோவில் ஓட்டுநர் சேர்க்காமல் 2 பேர் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு இன்றும் புதிய கட்டுப்பாடுகளையும், தளர்வுகளையும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும் சனி, ஞாயிறு , அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் கூடுவது 11.4.2021 முதல் தடை செய்யப்படுகிறது.

கடற்கரையில் அதிக கூட்டம் கூடும் என்பதாலும், அதன் மூலம் கொரோனா பரவல் அதிகரித்து விடும் என்பதாலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் யாரும் கடற்கரை பகுதிகளுக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கமெண்ட்: கடல் அலை அலதியானது . கொரோனா அலையும் அல்லவா சேர்ந்தே வருகிறது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here