காலமான இளவரசர் பிலிப் இறுதி சடங்கு

 –வரும் 17ம் தேதி நடக்கிறது

  பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு…

இங்கிலாந்து இளவரசர் பிலிப் இறுதி சடங்கு ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெறும் என்று பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.

இங்கிலாந்து: 

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் உயிரிழந்தார். இந்த அதிகாரபூர்வமான தகவலை இங்கிலாந்தின் பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.

இவருக்கு வயது 99. கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக்குறைவு காரணமாக லண்டனிலுள்ள கிங் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


பின்னர் சிகிச்சை முடிந்து அரண்மனை திரும்பினார். இந்நிலையில் அவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை பக்கிங்காம் அரண்மனை கூறியது. 

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் பின் இறுதி சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற உள்ளதாக பக்கிங்காம் அரண்மனை  தெரிவித்துள்ளது.


கொரோனா பரவல் காரணமாக பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை என்றும் இறுதிச்சடங்கை பொதுமக்கள் காணும் வகையில் ராயல் வெப்சைட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here