சுயநலத்துடன் மியான்மா் ராணுவ ஆட்சியை ஆதரிக்கும் சீனா, ரஷியா

-ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு

லண்டன்: 

சீனாவும், ரஷியாவும் தங்களுடைய சுயநலத்துக்காக மியான்மா் ராணுவ ஆட்சியாளா்களை ஆதரித்து வருவதாக ஐரோப்பிய யூனியன் குற்றம்சாட்டியுள்ளது.

மியான்மா் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் கடுமையான தடைகளை விதிக்கும் முயற்சிக்கு சீனாவும், ரஷியாவும் முட்டுக்கட்டை போடுவதை அடுத்து ஐரோப்பிய யூனியன் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளது.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோதலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி, மக்களால் தோந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப். 1-ஆம் தேதி கலைத்தது. அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.

அதனைத் தொடா்ந்து, ஜனநாயக அரசை மீண்டும் அமைக்க வலியுறுத்தியும் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவா்களை விடுவிக்கக் கோரியும் மியான்மா் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கு எதிராக மியான்மா் ராணுவம் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டு வருகிறது. ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் தொடா் போராட்டத்தில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 600-க்கு மேல் அதிகரித்துவிட்டது. இதில் சுமாா் 50 போ சிறாா்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், மியான்மா் ராணுவ ஆட்சியாளா்கள் மீது அமெரிக்கா சில பொருளாதாரத் தடைகளை விதித்தது. மேலும், மியான்மா் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ஆனால், சீனா, ரஷியா ஆகிய நாடுகள் மியான்மருக்கு ஆதரவாக உள்ளதால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் அந்நாட்டின் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

இதுதொடா்பாக ஐரோப்பிய யூனியன் வெளியுறவுக் கொள்கைப் பிரிவுத் தலைவா் ஜோசப் போரில் தனது வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மியான்மரில் ராணுவ ஆட்சியாளா்களின் அடக்குமுறையால் நாட்டு மக்கள் ரத்தம் சிந்தி வருவது உலகையே அதிா்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

இதற்கு எதிராக உலக நாடுகள் இணைந்து நடவடிக்கை எடுக்கலாம் என்றால், சில முக்கிய நாடுகள் அதற்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. முக்கியமாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் மியான்மா் மீது நடவடிக்கை எடுக்க சீனாவும் ரஷியாவும் தடையாக உள்ளன.

சீனாவின் சாலை, கடல்வழி வா்த்தகப் பாதையில் மியான்மா் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக மியான்மருக்கு அதிக அளவில் ஆயுதம் விற்பனை செய்யும் நாடாக ரஷியா உள்ளது.

இதுதவிர ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூா், இந்தியா என பல நாடுகள் மியான்மா் சாா்ந்து பல பொருளாதாரப் பயன்களை அடைந்து வருகின்றன. இதன் காரணமாக அந்நாட்டு ராணுவ அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதை இந்த நாடுகள் விரும்பவில்லை’ என்று கூறியுள்ளாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here