அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு..

இதெல்லாம் செயல்பட அனுமதி

பிரிட்டனில் அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வு குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில் இன்று முதல் முடி திருத்தும் கடைகள், அழகு நிலையங்கள் போன்ற கடைகள் இயங்கும் என்றும் உணவு, மது பானங்கள் வெளியில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் விடுமுறைக்கு வெளியே செல்லலாம். இதனைத் தொடர்ந்து திருமண நிகழ்வுகளில் 15 பேரும், இறுதி சடங்கில் 30 பேரும் வரை கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட நபரை அவர்களின் குடும்பத்தை சேர்ந்த 2 பார்வையாளர்கள் பார்க்கலாம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here