ஜார்ஜ் டவுன்: பினாங்கு பாலத்தில் ஏற்பட்ட இரண்டு விபத்துக்களால் வியாழக்கிழமை (ஏப்ரல் 15) காலை பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுத்தன.
பிரதான பகுதியில் இருந்து தீவுக்குச் செல்லும் பாதைகளில் இந்த விபத்துக்கள் நிகழ்ந்தன, இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விபத்துக்களில் ஒன்று கவிழ்ந்த கார் சம்பந்தப்பட்டதாகவும், இரண்டாவது விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் சம்பந்தப்பட்டதாகவும் அறியப்படுகிறது.
பின்னர் விபத்துக்குள்ளான இடம் சரி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.