வெறும் பாதுகாப்புக்காக 172 கோடி செலவா?

அம்மாடியோவ்- எல்லாம் நம்ப காசுதாம்பா..!

பேஸ்புக்கின் தலைமை செயல் அதிகாரத்தில் இருக்கும், இணை நிறுவனருமான மார்க் ஜுக்கர்பெர்கின் பாதுகாப்புச் செலவுக்காக மட்டுமே சென்ற 2020- ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 23 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது, இந்திய  மதிப்பில் சுமார் 172 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் மார்தட்டிகொண்டிருக்கிறது.

இதை பரிவர்த்தனை ஆணையத்திடம் கூறிய நிறுவனம், அதில், சுமார் 13.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மார்க் ஜூக்கர் பெர்கின் தனிப்பட்ட , அவர் குடியிருக்கும் வீட்டின் பாதுகாப்புக்காக செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கூடுதலாக 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அவரின் பாதுகாப்புக்காக செலவாகியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

கமெண்ட்: பாத் ரூம்லே கொட்டுற தண்ணிபோல கொட்டிகிட்டெ இருக்கிற மக்கள் காசு தானே! எப்படிச்செலவான என்ன ? முகத்திற்கு நேரே  கேட்க முடியுமா? முக நூல்லே வெணும்னா கருத்து சொல்லலாம். அவ்வளவுதானே! இன்னும் செலவு பண்ணுங்க, தேவை இல்லாம அள்ளிக்கொடுக்க மக்கள் இருக்கும்போது என்ன கவல உங்களுக்கு !

கொரோனா ஊரடங்கு, அமெரிக்க அதிபர் தேர்தல் என பலவித காரணங்களினால் பாதுகாப்பு செலவுகள் அதிகரித்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், மார்க் ஜூக்கர்பெர்க் உலகம் முழுவதும் தெரிந்த நபர் என்பதால் தான் இப்படியான பாதுகாப்பு ஏற்பாடு என பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here