மரணத்தண்டனை கைதி பன்னீர் செல்வம் எழுதிய கருணை காட்டுங்கள் பாடல்

கோலாலம்பூர்: மரண தண்டனை விவகாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பாடகர் சந்தேஷ் குமார் ஒரு இசை குறுந்தட்டை வெளியிட்டுள்ளார்.

”Arah Tuju”  என்று அழைக்கப்படும் ராப் சிங்கிள் அனைத்து மலேசியர்களையும் மரண தண்டனை கைதிகளுக்கு கருணை காட்டவும் அவர்களை மன்னிக்கவும் கேட்டுக்கொள்கிறது. இந்த பாடலின் வரிகளை சிங்கப்பூரின் சாங்கி சிறையில் மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் மலேசியரான பன்னீர் செல்வம் எழுதியுள்ளார்.

2018 ஆம் ஆண்டின் மலாய் ஹிட் பாடலான “Amalina” க்கு பெயர் பெற்ற சந்தேஷ் – பன்னீரின் அவலநிலை குறித்து கேள்விப்பட்ட பிறகு பாடலைப் பாட ஒப்புக்கொண்டதாகக் கூறினார்.

நான் இதற்கு முன்னர் ஒருபோதும் இந்த பாடல் விவகாரம் குறித்து அறிந்திருக்கவில்லை அல்லது விவாதித்ததில்லை. பாடல் அவலநிலை அல்லது மரண தண்டனையில் இருப்பவர்களைப் பற்றியது. அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் மன்னிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

பலர் தங்கள் நிலைமைக்கு பலியாகி வருகிறார்கள். வறுமை மற்றும் சமூக பிரச்சினைகள் காரணமாக மற்றவர்களால் கையாளப்படுகிறார்கள் என்று சந்தேஷ் மேலும் கூறினார்.

சனிக்கிழமையன்று (ஏப்ரல் 17) Sebaran Kasih, என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள நிலையில், மரண தண்டனை என்பது ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக இருப்பதால் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்வதில் ஆபத்து இருப்பதாக அவர் கூறினார்.

இது குறித்து அவரது ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பக்கூடும் என்று அவர் கூறினார். ஆனால் மரணதண்டனை எதிர்நோக்கி இருப்பவர்கள் மீதான சமூகத்தின் கருத்துக்களை இந்த பாடல் மாற்றும் என்று தான் நம்புகிறேன் என்று கூறினார்.

பாடல் வரிகள் மிகவும் கவிதையானவை. மிக ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளன. அதனால்தான் பாடலைப் பாட ஒப்புக்கொண்டேன் என்று அவர் கூறினார். மியூசிக் வீடியோவைப் பாடுவதற்கும் தயாரிப்பதற்கும் முழு செயல்முறையும் ஆறு மாதங்கள் எடுத்தது என்றார்.

மலேசிய சிறைகளில் 1,300 க்கும் மேற்பட்டோர் மரண தண்டனையில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள்.

பன்னீரின் சகோதரி பி.ஏஞ்சலியா இந்த திட்டம் குறித்து உற்சாகமாக இருப்பதாகவும், மரண தண்டனை குறித்து ஆங்கிலம், மலாய் மற்றும் தமிழ் மொழிகளில் பாடல்களை எழுதி வருவதாக Sebaran Kasih   நிறுவனர் ஏஞ்சலியா கூறினார்.

33 வயதான பன்னீர், செப்டம்பர் 3, 2014 அன்று உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் 51.84 கிராம் டயமார்பின் அல்லது ஹெராயின் கடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.

அவர் மே 2019 இல் தூக்கிலிடப்படவிருந்தார், ஆனால் முறையீட்டு செயல்முறையை சவால் செய்ய நீதித்துறை மறுஆய்வு தாக்கல் செய்ய மேல்முறையீட்டு நீதிமன்றம் அவகாசம் அளித்ததை அடுத்து கடைசி நிமிட மறுபரிசீலனை கிடைத்தது.

சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாகோப் முன்பு பன்னீரின் குடும்பத்தினர் வழங்கிய ஒரு வேண்டுகோளை நிராகரித்தார்.

நீதித்துறை மறுஆய்வைத் தொடங்க  கோரி பன்னீரின் மேல்முறையீட்டை கடந்த மாதம் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

வழக்கறிஞர்களிடமிருந்து சமர்ப்பிப்புகளைக் கேட்ட பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்றம் மேல்முறையீட்டு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here