-நடிகை ரைசாவுக்கு மருத்துவர் நோட்டீஸ்
இந்நிலையில் தற்போது ரைசா அனுப்பிய வக்கீல் நோட்டீசுக்கு மருத்துவர் பைரவி பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில், “எனது சிகிச்சை குறித்து நடிகை ரைசா அவதூறு பரப்பி வருகிறார்.
அவர் மூன்று நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும்.” என தெரிவித்துள்ளார்.
மேலும் ரைசா தனது நற்பெயரை கெடுக்க முயற்சிப்பதாகவும் மருத்துவர் பைரவி குற்றம்சாட்டி உள்ளார்.
இதையடுத்து நடிகை ரைசா அவரிடம் மன்னிப்பு கேட்பாரா? அல்லது மான நஷ்ட வழக்கை சந்திப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.