–மக்கள் மீதான சுமை கடுமையானது!
விலையேற்றம் என்ற வசப்பாட்டில் மக்கள் சிக்குண்டிருந்தாலும் பொருட்களை வாங்கித்தான் ஆக வேன்டும் என்ற கடப்பாட்டில்தான் காலம் தள்ள வேண்டியிருக்கிறது.
விலைவாசியைத் தடுக்க அரசின் நிரந்தர அல்லது அன்றாட விலைப்பட்டியல் முறைப்படுத்தப்பட்டால் இதற்குத்தீர்வு கண்டுவிடமுடியும். அப்படி ஏதும் செய்யப்படுகிறதா என்று தெரியவில்லை.
விழாக்காலங்களில் மட்டும் விலைகள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்போது மற்ற சாதாரண நாட்களில் ஏன் கட்டுப்பட மறுக்கிறது என்று தெரியவில்லை.
காரணமின்றி விலையேற்றம் செய்கின்றவர்கள் கொடுமைக்குரிய தண்டனைக்குரியவர்கள். இவர்கள் மக்களைக் கொடுமைப்படுத்துகின்றவர்கள் பட்டியலில் உள்ளவர்களாக இவர்களைப் பட்டியல் இடவேண்டும்.
மக்களைக் கொடுமைப்படுத்துவதற்கு என்ன சட்டம் வகை செய்கிறதோ அந்த சட்டத்தில் அடிப்படையில் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
விலயேற்றத்தை காரணமின்றி செய்கின்றவர்கள் ஒரு வித்தையைக் கற்று வைத்திருக்கிறார்கள். பொய்யான காரணத்தை முதலில் ஊடகங்களில் பதிவு செய்கிறார்கள்.
மக்கள் மத்தியில் விலையேறிவிட்டது என்ற வார்த்தையைப்பேச வைக்கிறார்கள். நம்பவக்கிறார்கள். இதைக்காரணமாகப் பயன்படுத்திக்கொண்டு விலையேற்றத்தை வலிக்காமல் செய்து விடுகின்றனர்.
விலையேற்றம் கண்டிருக்கிறது என்று மட்டும் நம்பும் மக்கள் ஏன் விலையேற்றம் என்பதை ஆராய்வதில்லை. இதற்கு ஒரே காரணம் அமலாக்க அதிகாரிகள் பார்த்துக்கொள்வர்கள் அல்லது பய்னீட்டாளர் துறைக்குத்தெரியும் என்பதுதான். ஏற்றத்தை நியாயப்பட்டியலில் சேர்த்துவிடும் அப்பாவிகளாக மக்கள் இருக்கிறார்கள்.
தப்பு எங்கே நடக்கிறது?
மக்களா? வணிகர்களா? அரசா? தீடீர் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசின் விலைப்பட்டியல் தயாராக இருக்க வேண்டுமல்லவா?
தயவு செய்து மக்களை பலிகடா ஆக்காதீர்கள். அவர்கள் மீது தாங்க முடியாத சுமை ஏற்றப்படுகிறது. விலையேற்றம் செய்கின்றவர்களை மக்கள் கொடுமைச் சட்டத்தில் தண்டியுங்கள்!