உதவும் மனப்பான்மைக்குச் சமயச் சாயம் ஏன்?

 

மனித நேயத்திற்கு மாபெரும் இழுக்கு!

மனிதாபிமான , ஏழைகளை வாழ வைக்கும் உதவிகளுக்குச் சமயச் சாயம் பூசி அசிங்கப்படுத்துவது மிகப்பெரிய வேதனையாக உள்ளது.

இந்த நாட்டில் இப்போது என்னதான் நடக்கிறது என்பது தெரியாமல் சாமானிய மக்கள் மிரண்டு போய் இருக்கின்றனர்.

இனம், சமயம், நிறம் பார்க்காது செய்யப்படும் மனிதநேய உதவிகளுக்குச் சமயச் சாயம் பூசும் ஈனப் பிறவிகள் நாட்டில் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை விதைத்து வருகின்றனர்.

புக்கிட் மெர்தாஜம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சிம், ஜசெக கட்சியைச் சேர்ந்தவர். பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக் காலத்தில் விளையாட்டு, இளைஞர்துறை துணை அமைச்சராகவும் இருந்தவர். இயற்கையிலேயே இளகிய மனம் படைத்தவர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் கடுமையான மன உளைச்சல், பய உணர்வு போன்றவற்றால் ஆட்டுவிக்கப்பட்ட ரோஸ் என்ற இளம் மலாய்ப் பெண்மணி, வேலை, பணம், வீடு இன்றி போக்கிடம் தெரியாமல் பரிதவித்துக் கொண்டிருந்தார். கண்களில் கண்ணீர் குளம் கட்டியிருந்தது.

ரோஸின் நிலைகண்டு மனம் பதைபதைத்துப் போன ஸ்டீவன் சிம், அவர் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையில் வியாபாரம் செய்வதற்குத் தேவையான உபகரணங்களை வாங்கித் தந்து கையில் கொஞ்சம் பணமும் கொடுத்தார்.

இன்று ரோஸ், ரமலான் பசாரில் வியாபாரம் செய்து நாள் ஒன்றுக்குச் சில நூறு வெள்ளிகள் சம்பாதிக்கிறார். முகமெல்லாம் பூரிப்பைத் தவிர வேறு எதுவும்  அவரிடம்  தென்படவில்லை.

தனக்கு வாழ்வதற்கு வழிகாட்டிய – உதவிய மக்கள் பிரதிநிதி ஸ்டீவன் சிம்மை இதயப்பூர்வமாகப் பாராட்டி நன்றி   சொல்லி வருகிறார்  அவர்.

மற்றொரு சம்பவத்தில் சைகை்கிளில் ஃபுட்பாண்டா உணவு பட்டுவாடா செய்துவந்த முகமட் என்ற ஒரு மலாய் இளைஞருக்கு ஸ்டீவன் சிம் ஒரு மோட்டார் சகை்கிளை அன்பளிப்பாக வழங்கினார்.
மாதம் 500 வெள்ளி சம்பளத்தில் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருந்த அந்த மலாய்ச் சொகோதரர் மோட்டார் சகை்கிள் வாங்க முடியாமல் பரிதவித்தார்.

பினாங்கைச் சேர்ந்த அந்த இளைஞர் இன்று பட்டாம் பூச்சிபோல் மோட்டார் சைகை்கிளில் ஃபுட்பாண்டா உணவு பட்டுவாடா செய்து வருகிறார்.

மோட்டார் சைகை்கிள் வாங்கும் தன் கனவு வெறும் ஏக்கமாகவே போய்விடுமா என்று கலங்கியிருந்த முகமட்டிற்கு சரியான நேரத்தில் ஒரு மோட்டார் சைகை்கிளை வாங்கித் தந்து அந்த ஏக்கத்தைப் போக்கியிருக்கிறார் ஸ்டீவன் சிம்.

அதே  சமயத்தில் வாடகை வீட்டில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட ஒரு மாதும் அவரின் பிள்ளைகளும் பெரும் தவிப்போடு தெருவில் விடப்பட்டனர்.

அவர்களின் நிலை அறிந்து விரைந்து களம் இறங்கிய ஸ்டீவன் சிம், அவர்களுக்கு ஒரு வீட்டை உடனடியாக ஏற்பாடு செய்து தந்து குடியமர்த்தியதோடு வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும்  சமையல் பொருட்களையும் வாங்கித் தந்தார்.

அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த மூன்று சம்பவங்களையும் மலேசியர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ஸ்டீவன் சிம்மை பாராட்டு மழையில் நனைத்தனர்.

இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சர்ச்ங்கை்குரிய கல்வியாளர் கமாருல் ஸமான் யூசோப், ஸ்டீவன் சிம்மின் இந்த மக்கள் சேவையை கிறிஸ்துவ மயம் என அர்த்தம் கற்பித்து கொச்சைப்படுத்தி, தூற்றிவருகிறார்.

ஒரு சமயக் கட்சியைப் பின்புலமாகக் கொண்டிருக்கும் கமாருல் ஸமானின் இந்த அநியாயக் குற்றச்சாட்டுகளால் கொதித்து கொந்தளித்துப் போயிருக்கும் ஸ்டீவன் சிம், அவர் மீது வழக்குத் தொடுக்கப் போவதாகச் உரைத்திருக்கிறார்.

அசிங்கமான எண்ணமும் சிந்தனையும் கொண்டவர்கள் ஆத்மார்த்தமான மக்கள் சேவையை ரொம்பவே  அசிங்கப்படுத்தி வருவது வெட்கக் கேடானது.

இன நல்லிணக்கம் எப்படி காப்பாற்றப்படும்?

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here