இந்தியாவில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், எந்தெந்த மாநிலத்தில் எப்போது தேர்தல் நடைபெறுகிறது என்பது தொடர்பாக விரிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 18வது மக்களவையை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் மாதம் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வருகிற ஜூன் 4ம் தேதி ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
அந்த வகையில் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 19ம் தேதி துவங்க உள்ளது. ஏப்ரல் 26ம் தேதி 2ம் கட்டமும், மே 7ம் தேதி 3வது கட்டமும், மே 13ம் தேதி 4வது கட்டமும், மே 20ம் தேதி 5வது கட்டமும், மே 25ம் தேதி 6வது கட்டமும், ஜூன் 1ம் தேதி 7வது கட்டமும் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தியாவில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு
இதில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் அருணாச்சல பிரதேசம், ஆந்திர பிரதேசம், டெல்லி, கோவா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஹரியாணா, கேரளா, மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், பஞ்சாப், தெலங்கானா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களிலும், அந்தமான் நிக்கோபார் தீவுகள், சண்டிகர், தாத்ரா நாகர் ஹவேளி, லட்சத்தீவுகள், புதுச்சேரி, லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் உட்பட 22 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

கர்நாடகா, ராஜஸ்தான், திரிபுரா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. சத்தீஸ்கர், அசாமில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஒடிசா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்டில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தில் 102 தொகுதிகளிலும், 2வது கட்டத்தில் 89 தொகுதிகளிலும், 3வது கட்டத்தில் 94 தொகுதிகளிலும், 4வது கட்டத்தில் 96 தொகுதிகளிலும், 5வது கட்டத்தில் 49 தொகுதிகளிலும், 6வது கட்டத்தில் 57 தொகுதிகளிலும், 7வது கட்டத்தில் 57 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Lok Sabha election 2024 phase 7 date: State-wise and constituency-wise full list and key details - The Economic Times
தமிழ்நாட்டில் வருகிற மார்ச் 20ம் தேதி முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். மார்ச் 27ம் தேதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இறுதி நாளாகும். மார்ச் 28ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். மார்ச் 30ம் தேதி வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி தேதி ஆகும்.
ஏப்ரல்19ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறும். ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here