–மனிதவள அமைச்சிடம் விண்ணப்பிக்கலாம்
கோலாலம்பூர்-
நான்கு தொழில்துறைகளில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. அவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ள நேரடியாக மனிதவள அமைச்சில் முதலாளி தரப்பினர் விண்ணப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
இந்நாட்டிற்குச் சட்டப்பூர்வமாக வந்து கோவிட்-19 காலத்தில் வேலையிழந்த 73 ஆயிரம் அந்நியத் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குச் சேர்க்கலாம்.
உணவகங்கள், துப்புரவுப்பணி, சிறுதொழில், மளிகை வியாபாரம், மொத்த வியாபாரம் ஆகிய நான்கு தொழில்துறைகளிலும் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ளும் வாய்ப்பினை மனிதவள அமைச்சு ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பூர்வமாக நாட்டிற்குள் வந்தவர்களை வேலைக்கு அமர்த்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
ஆகவே புதிய ஏஜெண்டுகளிடம் பணம் தந்து ஏமாற வேண்டாம். யாரிடமும் பணம் தரக்கூடாது. நேரடியாக மனிதவள அமைச்சு அதிகாரிகளைச் சந்திக்கலாம் என்று டத்தோஸ்ரீ சரவணன் விளக்கம் அளித்தார்.