இந்தியாவில் இருந்து வருவோருக்குத் தடை ஏன்?

மலேசியப் பிரதமர் விளக்கம்

இந்தியாவில் இருந்து வரக்கூடியவர்கள் மலேசியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதானது யாரையும் ஒதுக்கும் நோக்கத்தைக் கொண்டது அல்ல .

இது இனவாதம் அல்ல எனவும் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெளிவுபடுத்தியுள்ளார்.

உருமாறிய கோவிட்-19 கிருமிப் பரவலைத் தடுப்பதற்கே அரசாங்கம் இந்த முடிவை எடுத்திருக்கிறது என்று அவர் விளக்கமளித்தார்.

நான் தலைமையேற்ற தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் இருந்து வரக்கூடியவர்களை நாட்டிற்குள் நுழைய அனுமதிப்பதில்லை என முடிவு எடுக்கப்பட்டது. இது இனவாதமோ யாரையும் ஒதுக்கும் நோக்கத்தைக் கொண்டதோ அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

அதி தீவிரமாக இருக்கக்கூடிய உருமாறிய கோவிட்-19 பரவலைத் தடுப்பதே இதன் முக்கியமான நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து யாரும் வான், கடல், தரைமார்க்கமாக மலேசியாவிற்குள் நுழைய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் விவரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here