
–இவ்வாண்டு பிடி3 தேர்வு ரத்து
கோலாலம்பூர்,
இவ்வாண்டு தொடங்கி ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான யூபிஎஸ்ஆர் தேர்வை முழுவதுமாய் ரத்துசெய்ய அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ரட்ஸி ஜிடின் தெரிவித்தார்.
கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக கடந்தாண்டு அந்தத் தேர்வு தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டதை அடுத்து பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி அரசாங்கம் இம்முடிவை எடுத்துள்ளது.
குறிப்பாக ஆரம்பப்பள்ளி அளவில் சிறந்த முறைகளில் கல்வி செயல்பாடுகள் குறித்து கல்வி அமைச்சு ஆய்வு செய்துவந்துள்ளது. அதில் வெளிநாடுகளில் அமல்படுத்தப்பட்டிருக்கும் செயல்பாடுகளும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பில் தலைமையாசிரியர், ஆசிரியர், பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தரப்பினர் என 1,700க்கும் மேற்பட்டவர்களுடன் பேச்சு மேற்கொள்ளப்பட்டு இவ்வாண்டு தொடங்கி யூபிஎஸ்ஆர் தேர்வை முழுவதுமாய் ரத்துசெய்ய முடிவெடுத்துள்ளோம் என நேற்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் அவர் விவரித்தார்.
யூபிஎஸ்ஆர் தேர்வு ரத்துசெய்யப்பட்டதை அடுத்து இவ்வாண்டு தொடங்கி பள்ளி அடிப்படையிலான மதிப்பீட்டுத் திட்டத்தில் கவனம் ஙெ்லுத்தப்படும்.
மேலும் இத்தேர்வை அடுத்து ஆரம்பப்பள்ளிகளில் பயிலும் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான மதிப்பீடு முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதற்கிடையே கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக இவ்வாண்டு படிவம் மூன்று மாணவர்களுக்கான பிடி3 தேர்வும் தற்காலிகமாக ரத்துஙெ்ய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.