மலேசியாவின் Flexi Storage குழுமத்தின் பங்குகளை வாங்கியது சிங்கப்பூரின் StorHub Group

கோலாலம்பூர்-
சிங்கப்பூரின் மிகப்பெரிய, நீண்ட நாட்களாக செயல்பட்டு வரும் StorHub Group சுய கிடங்கு செயல்பாட்டாளர் தரப்பு மலேசியாவின் சுய கிடங்கு குழுமமான Flexi Storage குழுமத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்கியுள்ளது.

 

இதன்மூலம் இந்த Flexi Storage சுய கிடங்கு வசதிகளை மலேசிய StorHub Group சுய கிடங்குகளாக உருமாற்றப்படுகிறது. முன்னதாக 2015ஆம் ஆண்டு இரண்டு உள்நாட்டுத் தொழில்முனை வோர்களாக டெஸ்மன்ட் ஹாவ், அலெக்ஸ் லீ ஆகிய இருவரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த Flexi Storage குழுமம் கோலாலம்பூர், பெட்டாலிங் ஜெயா, ஸ்ரீகெம்பாங்கான் பகுதியில் 24 மணி நேரமும் மலேசியர்களுக்கு சுய கிடங்கு வசதிகளை வழங்கி வந்தது.

அதேசமயம் 15 நகர்களில் தமது தடத்தைப் பதித்துள்ள StorHub Group இணைவது மலேசியத் தொழில்முனைவோர்களாக எங்களுக்கு மிகவும் பெருமை அளிப்பதாக StorHub Group மலேசிய சுய கிடங்கு தலைமைச் செயல் அதிகாரி டெஸ்மன்ட் ஹாவ் கருத்துரைத்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு நாங்கள் செயல்படத் தொடங்கியதை அடுத்து 1,600க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சுய கிடங்குச் சேவையை வழங்கியுள்ளோம்.

தற்போது இந்தக் கூட்டமைப்பின் வாயிலாக மலேசியாவிலும் மிகப்பெரிய வர்த்தகச் சாதனையைப் புரிய முடியும் என்று நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

முன்னதாக கோவிட்-19 தொற்றுப் பரவல் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சமையல்கலை, சைக்கிளோட்டம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் புதிய வாடிக்கையாளர்கள் அலையை ஏற்படுத்தியுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய StorHub Group குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி மைக், சிங்கப்பூர், ஆசிய பசிபிக் நாடுகளில் கடந்த 20 ஆண்டுகளாக எங்கள் நிறுவனம் இயங்கி வருகிறது.

அதிலும் வளர்ந்து வரும் வர்த்தகச் சந்தை தன்மையுடைய நாடுகளில் மலேசியா அடையாளம் காணப்பட்டுள்ளது. குறிப்பாக பெருந்தொற்றுப் பரவலுக்குப் பின்னர் இந்த சுய கிடங்கு தொழில்துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here