மலேசிய தல அஜித் ரசிகர்கள் மன்றத்தின் சமூக சேவை

தல அஜித் தன்னுடைய 50ஆவது பிறந்தநாளை மே 1 ஆம் தேதியான இன்று கொண்டாடுகிறார். அவரின் சமூக சேவைகளை பின்பற்றி மலேசிய தல அஜித் ரசிகர்கள் மன்றம் அவரின் பிறந்தநாளை மலாக்காவில் உள்ள  Pusat Jagaan Kasih Sayang Prasanna என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடினர்.

3 ஆதரவற்ற இல்லங்களை சேர்ந்த வயதான ஆண், பெண் மற்றும் சிறார்கள் என 155 பேருக்கு உணவு மற்றும் உதவிப் பொருட்களை வழங்கியிருக்கின்றனர். முதியவர்களுக்கு கால்சட்டை, ஷர்ட், லோஷன் ஆகியவையும் மூதாட்டிகளுக்கு கைலி, மேல்சட்டை ஆகியவையும் மேலும் சிறார்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கியதாக ரசிகர் மன்றத்தின் தலைவர் யோகேஸ்வரன் தெரிவித்தார்.

ஆண்டுத்தோறும் இதுபோன்ற உதவிகளை செய்து வருவதாகவும் எங்களின் இந்த சேவைக்கு உதவிப் பொருட்களை வழங்கி வரும் நல்லுளங்களுக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்தும் கொள்வதாகவும் யோகேஸ்வரன்@ சசி கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here