பொன்னியின் செல்வன் படத்துக்கு 4 தேசிய விருதுகள்

புதுடில்லி:

தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. சிறந்த தமிழ் படமாக, மணிரத்னம் தயாரித்து இயக்கிய பொன்னியின் செல்வன் 1 படம் தேர்வு செய்யப்பட்டது. இந்த படத்துக்கு சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு என மொத்தம் 4 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல், திருச்சிற்றம்பலம் படத்திற்கு சிறந்த நடிகை, சிறந்த நடனம் ஆகிய 2 விருதுகள் அறிவிக்கப்பட்டன.

கடந்த 2022ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று டில்லியில் அறிவிக்கப்பட்டன.

சிறந்த அனிமேஷன் படமாக ‘ஏ கோகனட் ட்ரீ’ தேர்வு
* சிறந்த திரைப்பட புத்தகமாக கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் தேர்வு
* சிறந்த தமிழ் படமாக பொன்னியின் செல்வன் 1 தேர்வு
* சிறந்த சண்டை பயிற்சியாளர் அன்பறிவு
* சிறந்த பின்னணி இசை – ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின் செல்வன்-1)
* சிறந்த நடிகைக்கான தேசிய விருது, திருச்சிற்றம்பலம் படத்தின் நாயகி நித்யா மேனனுக்கு வழங்கப்படுகிறது.
* சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது பொன்னியின் செல்வன் படத்திற்காக ரவி வர்மனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
* சிறந்த பொழுதுபோக்கு படமாக காந்தாரா தேர்வு
* பிரம்மாஸ்திரா படத்துக்காக கேசரியா பாடலை பாடிய அர்ஜித் சிங்குக்கு சிறந்த பாடகர் விருது
* சிறந்த கன்னட மொழி படத்துக்கான விருது கே.ஜி.எப்., 2க்கு வழங்கப்படுகிறது
* சிறந்த படமாக மலையாளத்தில் வெளிவந்த ஆட்டம் படத்திற்கு வழங்கப்படுகிறது.
* சிறந்த நடிகர்- ரிஷப் ஷெட்டி (காந்தாரா)
* திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் ‛மேகம் கருக்காதா’ பாடலுக்கு நடனம் அமைத்த நடன இயக்குனர்கள் ஜானி, சதீஷ் ஆகியோர் சிறந்த நடன பயிற்சியாளர் விருதுக்கு தேர்வு
* சிறந்த பின்னணி பாடகியாக பாம்பே ஜெயஸ்ரீ தேர்வு
* சிறந்த ஒலி வடிவமைப்பு விருது பொன்னியின் செல்வன் படத்திற்காக ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்படுகிறது.

மொழிவாரியாக விருதுகள்

* சிறந்த தமிழ் படம் – பொன்னியின் செல்வன் (பாகம் 1)
* சிறந்த தெலுங்கு படம் – கார்த்திகேயா-2
* சிறந்த பஞ்சாபி படம் – பாகி டி தி
* சிறந்த கன்னட படம் – கேஜிஎப்-2
* சிறந்த மலையாள படம் – சவுதி வெள்ளக்கா சிசி.225/2009
* சிறந்த ஹிந்தி படம் – குல்மோஹர்
* சிறந்த மராத்தி படம் – வால்வி
* சிறந்த அசாமி படம் – எமுதி புதி
* சிறந்த பெங்காலி படம் – கபெரி அன்டர்தன்
* சிறந்த ஒடியா படம் – டமன்

2 படத்திற்கு 6 விருதுகள்

இன்று அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை பொன்னியின் செல்வன் (பாகம் 1) படத்திற்கு சிறந்த தமிழ் படம், பின்னணி இசை,ஒலி வடிவமைப்பு, ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் 4 விருதுகளும், திருச்சிற்றம்பலம் படத்திற்கு சிறந்த நடிகை, நடன பயிற்சி ஆகிய பிரிவுகளில் 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here