இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கா- எண்ணத்தைக் கை விட்டுடுங்க சாமீ!

5 வருஷம் சிறை! கடும் அபராதம் காத்திருக்குங்கோ ….வ்…..!

அன்புடன் அழைக்கிறது ஆஸ்திரேலியா என்று ஏமாந்துவிடாதீர்கள். கண்ணால் காண்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்.

இந்தியாவிலிருந்து வரும் தங்கள் நாட்டு மக்களுக்கு 5 ஆண்டுகள் சிறையும், கடுமையான அபராதமும் விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2ஆவது அலை எதிர்பார்த்ததை விட மிகத்தீவிரமாக உள்ளது. நேற்று மட்டும் உலகிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கான விமான சேவையை நிறுத்தியுள்ளன. அந்த வகையில் ஆஸ்திரேலியாவும் விமான சேவைக்கு தடை விதித்துள்ளது. ஆனாலும் இங்கிருந்து வேறு நாடுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எனவே அதனை கட்டுப்படுத்தும் விதமாக ஆஸ்திரேலிய அரசு கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா வரும் தங்கள் நாட்டு மக்களுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்த உத்தரவு வரும் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. தொடர்ந்து வரும் 15ஆம் தேதி மீண்டும் ஆஸ்திரேலியப் பிரதமர் மோரிஸன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் நிலைமையை ஆய்வு செய்து நடவடிக்கையை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here