பொருளியல் வளர்ச்சியில் 6 விழுக்காடு

 

சாதிக்க முடியும் சிங்கப்பூர் நம்பிக்கை

சிங்கப்பூர்-
பிரதமர் லீ: பயிற்சி, தேர்ச்சி மூலம் ஊழியர்கள் ஆயத்தமாக வேண்டும். சிங்கப்பூர் இந்த ஆண்டில் 6% அல்லது அதற்கும் அதிக வளர்ச்சியைச் சாதிக்க நல்ல வாய்ப்பு இருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார்.

இருந்தாலும் அத்தகைய வளர்ச்சி கோவிட்-19க்கு முன்பு நாடு இருந்த நிலைக்குத்தான் நம்மை மீண்டும் கொண்டு செல்லும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் ஊழியர்கள் புதிய ஆற்றல்களை வளர்த்துக்கொண்டு புது வாய்ப்புகளைப் பற்றிக்கொண்டு கோவிட்-19க்குப் பிந்தைய வாழ்க்கைக்குத் தயாராக வேண்டும் என்று  லீ வலியுறுத்தினார்.

தொடக்கத்தில் பயந்த அளவுக்கு உலகப் பொருளியல் நிலவரங்கள் இப்போது இல்லை என்பதைச் சுட்டிய அவர், சிங்கப்பூரின் பொருளியல் வாய்ப்புகள் கணிசமாக மேம்பட்டு இருப்பதாக தமது மே தின உரையில் தெரிவித்தார்.

வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்புகள் இருந்தாலும் விமானப் போக்குவரத்து, சுற்றுலா போன்ற துறைகள் பல சவால்களை எதிர்நோக்கி இருப்பதால் அவை விரைவில் மீட்சி அடையாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here