சந்தடியில்லாமல் ஒரு மாற்றம் – ஏமாற்றம்!

 

ஓகே வேண்டாம் –வசந்தமே போதும்!

அரசு தொலைகாட்சி அலைவரிசையில் இந்தியர்களுக்காக ஒளிப்பரப்படும் ஒரே தமிழ் கலைந்துரையாடல் நிகழ்ச்சியான வசந்தத்தின் ஒளிப்பரப்பு ‘ஓகே’ அலைவரிசைக்கு மாற்றப்பட்டிருப்பது மீதான தனது அதிருப்தியைப் பதிவு செய்துக் கொண்டார் டிரா மலேசியாவின் தேசிய தலைவர் சரவணன் சின்னப்பன் .

ஓகே’ அலைவரிசை அரசினால் பிரத்தியேகமாகச் சபா, சரவாக் வாழ் மக்களுக்கும், நகர்புறங்களில் வசிக்கும் இளைய தலைமுறையினருக்கும் நடத்தப்படும் அலைவரிசை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வசந்தம் நிகழ்ச்சியின் ஒளிப்பரப்பு ‘ஓகே’ அலைவரிசைக்கு மாற்றப்பட்டதையே பெரும்பான்மையான பார்வையாளர்கள் அறிந்திருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கடந்த 1 மே 2021 மனிதவள அமைச்சர் டத்தோ சரவணன் வசந்தம் நிகழ்ச்சியில் கலந்து உரையாற்றியதைப் பெரும்பான்மை மக்களால் காண இயலவில்லை.

இந்த ‘ஓகே’ அலைவரிசையைப் பிரத்த்தியேக கருவியின் மூலமே கண்டுகளிக்க முடியும் என்பதால் பலரும் செய்வதறியாது திணறுவாக டிரா சரவனன் கூறினார்.

300,000கும் மேல் நிரந்தரப் பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் வசந்தம் நிகழ்ச்சி; அரசு டிரா மலேசியா போன்ற அரசு சாரா இயக்கங்களுக்கும் சமூகத்தின் அனைத்து நிலை மக்களுக்குமான பாலமாகவும் இயங்கி வருவதாகக் கூறிய அவர்; பல நேரங்களில் மக்களிடையே சமூகம், பொருளாதாரம், அரசியல் சார்ந்த விடயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் வசந்தம் நிகழ்ச்சி பெரும் பங்காற்றுவதாகவும் கூறினார்.

இதனைக் கருத்தில் கொண்டு மீண்டும் வசந்தம் நிகழ்ச்சி ஆர்.டி.எம் அலைவரிசை 1 அல்லது 2-இல் ஒளிப்பரப்பப்பட வேண்டும் என்ற தனது வேண்டுகோளை மலேசிய தகவல் தொடர்பு  பல்லூடக அமைச்சிடம் சமர்பித்தார் சரவணன் சின்னப்பன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here