60 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த ராக்கெட்.

ஸ்பேஸ்எக்ஸின்   பால்கன் 9 

அமெரிக்காவில் உள்ள எலோன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பால்கன் 9 ராக்கெட் மூலமாக 60 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை (மே 4) நள்ளிரவில், புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து,தனது பால்கான் 9 ராக்கெட் மூலம் 34,400 பவுண்டுகள் உள்ள 60 ஸ்டார்லிங்க் இணைய செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

அதன்படி,பூமியின் சுற்று வட்டப்பாதையில் செயற்கைகோள்களை நிலைநிறுத்தி விட்டு ஒன்பது நிமிடங்களுக்குப் பிறகு,அட்லாண்டிக் பெருங்கடலில் சார்லஸ்டனுக்கு கிழக்கே சில நூறு மைல் தொலைவில் ராக்கெட்டின் பூஸ்டர் தரையிறங்கியது.இந்த பால்கன் 9 ராக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மறுசுழற்சி முறையில் இதுவரை 9 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடந்து சமீபத்திய எஃப்.சி.சி அறிக்கையின்படி,ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 7,000 க்கும் மேற்பட்ட கூடுதல் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு ஒழுங்குமுறை அங்கீகாரத்தைக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here