சுற்றுலா நடவடிக்கைகளில் எஸ்ஓபி விதிமுறைகள்

 உறுதி செய்யப்படும்!

கங்கார்-
கோவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவலை எதிர்கொள்வதற்கு மாநில அளவிலான அனைத்து சுற்றுலா நடவடிக்கைகளிலும் எஸ்ஓபி விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை டூரிஸம் மலேசியா எனும் மலேசிய சுற்றுலாத்துறை உறுதி செய்யும். அரசாங்கம் வரையறுத்துள்ள இந்த எஸ்ஓபி விதிமுறைகளை அமல்படுத்துவதில் தமது தரப்பு இதுவரை பாரபட்சம் காட்டவில்லை என அதன் உள்நாட்டுப் பிராந்திய, நடவடிக்கைப் பிரிவு முதன்மை இயக்குநர் டத்தோ டாக்டர் அமார் அப்துல் ஜபார் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி சுற்றுலாத்துறையினர், அரசு சாரா இயக்கங்கள், பேராக் மாநில ஊடகவியலாளர்களுடன் கெடா, பினாங்கு மாநில சுற்றுலா நிறுவனங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நபர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஓட்டுநருக்குக் கோவிட்-19 வைரஸ் தொற்று கண்டிருப்பதாகத் தெரிய வந்தது.

இந்நிலையில் அந்தப் பேருந்தில் அந்நபருக்கு மட்டுமே இந்தத்தொற்று கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரிடத்தில் இந்தத் தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் சுற்றுலாத்துறை மீது பழிபோடுவதை எங்கள் தரப்பால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நிகழ்ந்த இச்சம்பவம் குறித்த விளக்கங்களைத் தெரியப்படுத்தும் கடமை தனக்கு உள்ளதாகவும் டாக்டர் அமார் கூறினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here