சிலாங்கூர், பத்துமலையைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஹர்ஷித்தா சாய் (Harsheeta Sai) பிறந்தது முதல் ஒரு வினோதமான இருதய நோய்க்கு உள்ளாகியுள்ளார்.
அச்சிறுமிக்கு அமெரிக்காவில் உள்ள போஸ்டன் (Boston) குழந்தைகள் மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் என IJN எனப்படும் தேசிய இருதய சிகிச்சை மருத்துவமனை பரிந்துரை செய்துள்ளது.
அங்கு சிசிக்சை மேற்கொள்வதற்கு 350,000 அமெரிக்க டாலர்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டதால் அந்த தொகையை திரட்டுவது அவரது குடும்பத்திற்கு பெரும் சவாலாக இருந்ததால் பொதுமக்களின் உதவி நாடினார்கள்.
இந்த விவகாரம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு தெரிய வரவே, உடனே அந்த சிறுமிக்கு உதவ பணித்துள்ளார்.
பிரதமரின் அரசியல் செயலாளர் ஃபர்ஹான் ஃபவ்சி (Farhan Fauzi) சிறுமியின்
இல்லத்திற்கு வருகை புரிந்து நலம் விசாரித்ததோடு பிரதமர் சார்பில் நிதியுதவிக்கான காசோலையை அவரது தந்தையிடம் வழங்கியுள்ளார்.








