அம்மா என்றால் அன்பு , அன்பு என்பதும் அவளேதான்

(அன்னையர் தின சிறப்பு  9- 5- 2021)

 

அதுதானே மந்திரச்சொல்!

அம்மா..! சொல்லிப்பார்த்தால் இன்னல் தீரும்!

எத்தனை அழகான சொல் அம்மா!

சொல்லைப்போலவே அவளும் அழகுதான்

ஆனாலும் அவளை அழகற்றவள் என்று யாரும் கூறுவதில்லை!

 

மற்றவர்களைப்போல் அவளும் அழகானவளாகத்தான் இருந்தாள்.  அப்போதெல்லாம்,

தானொரு அழகி என்ற கர்வம் அவளுக்கிருந்ததும் உண்மைதான்! 

 

ஒரு குழந்தை, மறுகுழந்தை , அடுத்தடுத்து குழந்தைகள் பெற்றேடுத்தபோதெல்லாம் அவள் கர்வம் அவளுக்கு.

தன் அழகை குழந்தைகளுக்குத் தாரை வார்த்துக்கொடுத்துவிடும் கோடீஸ்வரி ஆனவளும் அவள்தான். 

 

தன்னழகை மறந்து, பிள்ளகளே பேரழகு என்று மெய்சிலிர்த்து , நெட்டி முறித்து, முத்தமழை பொழியும் நேரில்  காணும் தெய்வம் அவள். 

மேனி சுருங்கி எலும்பாய்த்தொன்றிய போதும் 

அம்மா அம்மா தான் . அவளே  பேரழகின் தெய்வம் !

இருந்த அழகை  பிள்ளைகளுக்கு வாரிக்கொடுத்துவிடும் வள்ளல் அவள். தனக்கென்று அவளிடம் ஏது இருக்காது.  

 

தர்மத்தின் தலைவியாய் நிற்கும் அன்னையை 

தவிக்க விடுவோரின் கடன் தீர்க்கவே முடியாதது.

அவள் கொடுத்த அழகை  அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் தூதுவர்களே பிள்ளைகள்.

எதையும் கொடுக்க வேண்டுமென்பதே அவளின் விருப்பம். எடுத்துக்கொள்ளும் எண்ணம் அவளுக்கு இருந்ததே  இல்லை.

தொல்லைகள் செய்தாலும் பிள்ளைகளே அவளின் கருவூலம்.  

அவள் கொடுத்த அழகை வைத்துக்கொள்ள நினைத்தாலும் வாய்ப்பே கிடைக்காது.

அவளிடம் பெற்ற அன்பும் அழகும் தொடர வேண்டுமெனில், அடுத்த தலைமுறையும் நீங்கள் செய்வதையே தொடர வேண்டுமெனில்,  

அன்னையர் தினத்தை அழகாய் கொண்டாடுவீர்! அன்னை , அவள் இல்லாமல்   ஆண்டவணும் இல்லை! 

ஆசிர்வதிக்கப்பட அம்மாவைப் போற்றுவீர்!

கேட்பீர் அவளின் மந்திரச்சொல்லை!  

 

மனோரதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here