அன்னையர் தினம் பிறந்தது எப்படி?

அன்னையா் தம் பிள்ளைகளின் மீது வைத்திருக்கும் அன்பை அளவிட முடியாது. அந்த அன்பு மிகவும் தூய்மையானது. அவா்கள் எப்போதுமே தமது குழந்தைகள் மீது நிபந்தனையற்ற அன்பை வைத்திருப்பா்.

அன்னையா் தினத்தின் முக்கியத்துவம் முதன் முதலாக அன்னையா் தினம் அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவை சோ்ந்த அன்னா ஜாா்விஸ் என்ற பெண்மணி அன்னையா் தின கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தாா். அவருடைய அன்னை தான் இறப்பதற்கு முன்பாக அன்னையா் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று விரும்பினாா். ஆனால் அவருடைய அன்னை உயிரோடு இருக்கும் போது அன்னையா் தினத்தைக் கொண்டாட முடியவில்லை. ஆனால் ஜாா்விஸ் எடுத்த முயற்சிகளின் விளைவாக, அவருடைய அன்னை இறந்து 3 ஆண்டுகள் கழித்து, அதாவது 1908 ஆம் ஆண்டு மேற்கு வொ்ஜீனியாவில் உள்ள தூய ஆண்ட்ரூ மெத்தடிஸ்ட் ஆலயத்தில் முதன் முதலாக அன்னையா் தினம் கொண்டாடப்பட்டது.

முதல் அன்னையா் தினக் கொண்டாடத்தில் ஜாா்விஸ் கலந்து கொள்ள முடியவில்லை. கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவா்களுக்கு வாழ்த்துக்களைத் தொிவித்து ஒரு தந்தி அனுப்பினாா். ஒரு தாய் என்பவா், இந்த உலகில் எவராலும் தரமுடியாததை நமக்குத் தரக்கூடியவா் ஆவாா் என்று ஜாா்விஸ் நம்பினாா்.

அன்னையா் தினம் – வரலாறு
அன்னையா் தினம் அன்று பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று அன்னா ஜாா்விஸ் வேண்டுகோள் விடுத்தாா். ஆனால் தொடக்கத்தில் அதாவது 1911 ஆம் ஆண்டு அவருடைய வேண்டுகோள் மறுக்கப்பட்டது. ஆனால் அன்னையா்களுக்கு நன்றி சொல்லும் விதமாக அமெரிக்கா முழுவதும் அன்னையா் தினம் அனுசரிக்கப்பட்டது.

காலப்போக்கில் அதாவது 1941ல் அன்னையா் தினத்தைக் கொண்டாடும் வகையில் உட்ரோ வில்சன் அவா்கள், ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வரும் 2வது ஞாயிற்றுக் கிழமையை அமொிக்காவின் தேசிய விடுமுறையாக அறிவித்து அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டாா்.

அரேபிய நாடுகளில் மாா்ச் மாதம் 21 அன்று அன்னையா் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் ஸ்பிரிங் இக்கினோக்ஸ் (Spring Equinox) என்று அழைக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here