விண்ட்ஹோக்:
சர்வாதிகாரி என்ற சொல்லை கேட்டவுடன் நம் நினைவுக்கு வருபவர் ஜெர்மனியின் அடால்ப் ஹிட்லர்.
ஜெர்மனி நாசிப்படைகளின் தலைவரான அடால்ப் ஹிட்லர் லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்துள்ளார். இந்த கொடூர நடவடிக்கையால் ஹிட்லர் என்ற பெயரையே உச்சரிக்க பலர் ஒரு நிமிடம் யோசிப்பார்கள்.
இந்நிலையில், அடால்ப் ஹிட்லர் என்ற பெயருடைய ஒரு நபர் கவுன்சிலர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார் என்ற வித்தியாசமான நிகழ்வு, உலக ஊடகங்களின் பக்கம் திருப்பியுள்ளது.
தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நமீபியா நாட்டில் அடால்ப் ஹிட்லர் என்ற பெயருடன் 54 வயது நிரம்பிய அரசியல்வாதி உள்ளார். இவர் சமீபத்தில் அந்நாட்டில் நடந்த கவுன்சிலர் தேர்தலில் ஆளும்கட்சி சார்பில் போட்டியிட்டார்.
தனது வெற்றியை தொடர்ந்து தனது பெயரும் பிரபலமானதை உணர்ந்த ஹிட்லர், நாசி சித்தாந்தத்திற்கு தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், தனக்கு அடால்ப் ஹிட்லர் என தனது தந்தை பெயர் வைத்ததாகவும் அந்த பெயரின் அர்த்தம் தனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார்..
இதில், சுவாரஸ்யம் என்னவென்றால், 1884 ஆம் ஆண்டு முதல் 1915 வரை நமீபியா, ஜெர்மனியின் காலனி நாடாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.









