மக்களின் மன அழுத்தம் அதிகமாகிக்கொண்டிருக்கிறது!

விடாமல் துரத்தும் கொரோனாதடுக்குமா தடுப்பூசி!

நாட்டில் கோவிட் தொற்றின் வேகம் அதிகரித்திருக்கிறது என்பது வருத்தமான செய்தியாகி வருகிறது. இத்தொற்றின் பாதிப்பு மரணப்பாதையாக மாறி வருகிறது. இத்தொற்றுக்காக போடப்படும் தடுப்பூசித்திட்டம் இன்னும் சாதாரணமக்களைச் சென்றடையவில்லை. 

அப்படியே சென்றடைந்தாலும் தடுப்பூசியின் மீது இன்னும் முழுமையான நம்பிக்கை வராமலிருக்கிறது என்பதும் உண்மை.  இதில் இன்னும் மக்கள் முழுமையான தெளிவு பெறவே இல்லை. குழப்பத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை!

இதில் கோவிட் -19 க்கான தடுப்பூசியின் பின் விளைவுகள் குறித்த ஐயத்தால் பொதுமக்கல் குழப்பான் சிந்தனையில் இருக்கின்றனர். தடுப்பூசியால் தொற்று  வராது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இதனால் தடுப்பூசி எதற்குப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது சொந்த காசில் சூனியம் என்பார்களே! அதுபோல ஏன் இந்த தொல்லை என்று குழம்பிக்கிடக்கிறார்கள்.

தடுப்பூசியின் பின் விளைவுகள் என்ன என்பதற்கான பதில் நிறைவாக இல்லை.  சுகாதாரத்துறையால் மிகத்தெளிவான பதிலுக்கு வரமுடியவில்லை. விளைவிகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்கின்றவரே பொறுப்பு ஏற்கவேண்டும் என்றால் எந்த விருந்தாளிதான் விருந்துக்க்கு வருவார்?

இன்னும் ஒரு குழப்பமும் மக்கள் பெரிதாக வருத்துகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன் தொற்று பற்றியிருந்தால் தடுப்பூசி அதைக்கட்டுப்படுத்தாது என்பதுதான்.  தொற்ரு இருக்கிறதா இல்லையா என்பதை எப்படி, எங்கு போய் பரிசோதித்துகொள்வது என்பது தெரியாமலும் மக்கள் பேந்தப் பேந்த விழித்துக்கொண்டிருப்பபதை  சுகாதாரத்துறை உணர்ந்து கொண்டதாகவும் அறிய முடியவில்லை.

தடுப்பூசி எதைத் தடுக்கும் என்பதில்  மக்கள் இன்னும் குழம்பிக்கிடக்கின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. தடுப்பூசிக்குப்பின் ஏற்படும் தொற்றைத் தடுக்கும் ஆற்றல் தடுப்பூசிக்கு  இருப்பதாக முழு நம்பிக்கை ஏற்படவில்லைஎம் புருஷனும் கச்சேரிக்குப் போனான் என்பதெல்லால் வெந்த புண்ணில் வேல் பாச்சும் கதை. இது  சரிப்படுமா? தடுப்பூசி கதையெல்லாம்  பேரப்பிள்ளைகளுக்குச் சொல்லும்  பாட்டி சுட்ட வடை கதை போல ஆகிவிடக்கூடாது.

இதற்கு என்ன தான் தீர்வு? 

தடுப்பூசியைத்தேடி மக்கள் அலையமுடியாது. தடுப்பூசி மக்களை நாடி வரவேண்டும். அதற்கு என்ன வழி என்று சுகாதாரத்துறை ஆராய வேண்டும். தொற்று வராமல் தடுக்க எம்சிஓ இருப்பதைப்போல தடுப்பூசிக்கும் வழி சொல்ல வேண்டும். மூத்த குடிமக்களுக்குச் சிரமம் கொடுக்காமல் தடுப்பூசித்திட்டம்  இருக்க வேண்டும். 

மேலும் உருமாற்றம் பெற்ற கொரோனாவை கட்டுப்படுத்தும் வீரியம் தடுப்பூசிகளுக்கு இல்லை என்றே பரவலாக நம்பப்படுகிறது. இவையாவும் மக்களின் கவலையாக இருக்கிறது என்பது செய்தி மட்டும் அல்ல மன உளைச்சலாகவே உருமாறிவிட்டது.

மக்களுக்குத் தெளிவான விளக்கம் இல்லாமல் தடுப்பூசித் திட்டம் வெற்றியைக் கொண்டுவராது. தெனாலி ராமன் வளர்த்த பூனை கதையாகவும் மாறிவிடக்கூடாது. 

மேலும் அமைச்சர்கள் முன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்வதெல்லாம் பக்கா சீரியலாகவே தோன்றுகிறது. 

இன்னும் பல அமைச்சர்கள், முன்களப்பணியாளர்கள் தடுப்பூசிப் பக்கமே எட்டிப்பார்கவில்லை என்பதும் ஒரு செய்தியாக  உலவுகிறது. 

இதில் தனியாரிடம் இப்பொறுப்பை ஒப்படைத்தால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்ற கேள்விகளுக்கும் சுகாதாரத்துறையே பொறுப்பு ஏற்க  வேண்டும் . மொத்தத்தில் மக்கள் மிகத்தெளிவான செயல் முறைக்கு வந்தாலொழிய  எந்த பருப்பும் வேகாது!

தடுப்பூசி தேவையா!

நாட்டில் மட்டுமல்ல , உலகலாவிய நிலையில் தடுப்பூசி என்பது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. தடுப்பூசி என்பது ஈராண்டுகளுக்கு மேல் ஆய்வு செய்யப்பட்டு அதன் எதிர்விளைவுகள்  அறியப்பட்டிருக்க வேண்டும் என்று மருத்துவ ஆய்வுகள் முன்பே கூறியிருக்கின்ற்ன.

ஆனாலும் அப்படியெல்லாம் காத்திருக்க முடியாது என்பதும் உண்மைதான். அதற்காக கடைவீதி வைத்தியம் செய்துகொள்ள முடியாது என்பதையும் சுககாரத்துறை  உணரவேண்டும். அவசரம் கருதி சமக்க வேண்டும் என்பது தேவைதான் ஆனாலும் சமைக்காதவையும் உதவாதே!

சுகாதாரரத்துறைக்கு மிக அதிகமான பொறுப்புகள் இருக்கின்றன. ஆனாலும் அமக்களின் அச்சம் தீர்க்கப்படவேண்டுமே என்ற கவலையும் மன அழுத்தமும் மேலும் பல சிக்கல்களை உருவாக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலையும் கூடவே வருகிறதே! 

ஒட்டு மொத்தமாக சுகாதாரம் சுகாதாரமாக இருந்தால்தான் மக்களின் நம்பிக்கை ஆதாரமாக இருக்கும்! இதுவரியிலான முயற்சிகளை பாராட்டாமல் இருக்க முடியாது. ஆனாலும்  கோவிட் – 19 துரத்துகிறதே!  மக்கள் திசை தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கின்றனரே!

மாத்திரை வடிவில் கொண்டுவர முடியுமா என்பதையும் ஆய்வு செய்யுங்கள்.

-கா.இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here