அம்னோவின் நிரந்தர துணைத்தலைவர் ஐசியுவில் அனுமதி

பெட்டாலிங் ஜெயா: கோவிட் -19 உறுதி செய்யப்பட்டுள்ள அம்னோவின் நிரந்தரத் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ரிஸுவான் அப்த் ஹமீத் (படம்) தற்போது அபாயக்கட்டத்தில் இருப்பதாக ஒரு மலாய் நாளேடு தெரிவித்துள்ளது.

இதை அம்னோ பொதுச்செயலாளர் டத்தோ ஶ்ரீ அஹ்மட் மஸ்லான் உறுதிப்படுத்தினார், ரிஸுவான் தற்போது யுனிவர்சிட்டி மலாயா மருத்துவ மையத்தின் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) தங்கியுள்ளார்.

ரிஸுவான் கோவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் உண்மை. ஐ.சி.யுவில் அவர் இருப்பதும் உண்மைதான் என்று அவர் நேற்று ஒரு குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில், முன்னாள் தணிக்கையாளர் ஜெனரலாக இருந்த ரிஸுவானின் மனைவி டான் ஸ்ரீ மதீனா மொஹமத்தும் ஐ.சி.யூ வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவர் கோவிட் -19  தொற்று இருக்கிறதா என்பதை வெளியிடவில்லை என்று அஹ்மத் சுருக்கமாக கூறினார்.

கட்சியின் கெபாங் பிரிவுத் தலைவரான ரிஸுவான், மே 3 ஆம் தேதி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுவதற்கு முன்னர் மே 1 ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டு அதே நாளில் ஐசியு வார்டுக்கு மாற்றப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here