கள்ளப் படகு மூலம் நாட்டிற்கு நுழைய முயன்ற 26 பேர் கைது

பெட்டாலிங் ஜெயா: மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (எம்.எம்.இ.ஏ) மற்றும் போலீஸ் தலைமையிலான நடவடிக்கையில் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் 26  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று அவர்கள் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் எம்.எம்.இ.ஏ. இயக்குனர் மரைடைம் கேப்டன் முகமது ரோஸ்லி காசிம் தெரிவித்தார்.

காப்பார் சுங்கை ஜாங்குட்டில் உள்ள ஒரு பாமாயில் தோட்டத்தில் தரையிறங்குவதைக் கண்டறிந்து பொதுமக்களிடமிருந்து ஒரு புகார் பெறப்பட்டது.

புலம்பெயர்ந்தோரை அழைத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்ட படகைக் கண்டுபிடித்ததாக MMEA  தெரிவித்தது.

சந்தேக நபர்கள் அனைவரும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. நாங்கள் 17 முதல் 53 வயதுடைய 21 ஆண்கள் மற்றும் ஐந்து பெண்களை கைது செய்தோம்.அவர்கள் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here