மலேசியாவின் மக்கள் தொகை 32.75 மில்லியன் என புள்ளி விவரத் துறை தகவல்

புத்ராஜெயா: மலேசியாவின் மக்கள் தொகை 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 32.75 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2020 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 32.62 மில்லியனிலிருந்து 0.4 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மக்கள்தொகை புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை புள்ளிவிவர நிபுணர் டத்தோ ஶ்ரீ டாக்டர் முகமட் உஜீர் மஹிதின் இன்று ஒரு அறிக்கையில், நாட்டின் மொத்த மக்கள் தொகை 29.91 மில்லியன் அல்லது 91.3 சதவீத குடிமக்கள் மற்றும் 2.84 மில்லியன் அல்லது 8.7 சதவீத குடிமக்கள் அல்லாதவர்களைக் கொண்டுள்ளது.

ஆண்களின் எண்ணிக்கை முறையே 16.83 மற்றும் 15.92 மில்லியனாக உள்ளது. இதே காலகட்டத்தில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை 2.26 மில்லியனிலிருந்து 2.37 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று முகமட் உசிர் கூறினார்.

இந்த போக்கு வயதான மக்கள்தொகையை நோக்கி செல்லும் பிற வளர்ந்த நாடுகளுடன் ஒத்து போகிறது அவர் கூறினார்.

2021 முதல் காலாண்டில் 0 முதல் 14 வயதுடைய மக்கள் தொகை 2020 முதல் காலாண்டில் 7.61 மில்லியனுடன் ஒப்பிடும்போது 7.56 மில்லியனாக குறைந்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில், நேரடி பிறப்புகளின் எண்ணிக்கை 10.8 சதவீதம் குறைந்து 102,969 பிறப்புகளாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 115,439 பிறப்புகள் இருந்தன.

2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தொற்றுநோய் COVID-19 காரணமாக இயக்கக் கட்டுப்பாட்டு ஆணையால்  எதிர்பார்த்தபடி குழந்தை பிறப்பு விகிதம் இல்லை என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மொத்தம் 43,545 இறப்புகள் பதிவாகியுள்ளன, இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 43,226 இறப்புகளுடன் ஒப்பிடும்போது 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here