தந்தை உறக்கத்தில்…. குழந்தைகள் வீதியில்…

ஜோகூர் பாரு:   கூலாய் உள்ள கம்போங் மெலாயு பகுதியில் 1 மற்றும் 3 வயதுடைய இரண்டு சிறுமிகள் நள்ளிரவில் சாலையோரம் சுற்றி திரியும்  காட்டும் வீடியோ கிளிப் பரவலாக பகிரப்பட்டுள்ளது.

இரவு 11.50 மணியளவில் அப்பகுதியில் அலைந்து திரிந்த குழந்தைகள் குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டபோது காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்ததாக கூலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர் டோக் பெங் யோவ் தெரிவித்தார்.

இருப்பினும், குழந்தைகளை பரிசோதித்த போது உடலில் எந்த காயமும் ஏற்படவில்லை என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

காவல்துறையினர் குழந்தைகளின் பெற்றோர் குறித்து விசாரித்து கொண்டிருந்தபோது, ​​24 வயதான உள்ளூர் நபர் ஒருவர் குழந்தைகளின் தந்தை என்று கூறி போலீசாரை அணுகினார். பின்னர் அவர் வழங்கிய ஆவணங்களால் அது உறுதிப்படுத்தப்பட்டது.

அவரின் மனைவி இரவு ஷிப்டில் பணிபுரிந்து வருவதாகவும், அவ்வாடவர் தனது குழந்தைகளை கவனித்துக்கொண்டிருக்கும்போத தூங்கி விட்டதாகவும் கூறினார். போலீசார் அவரை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here