தாத்தா இறந்தபோது இளவரசர் ஹரி உறக்கத்தில் இருந்தாராம்?

-வெளியான புதிய தகவல்கள்..!!

எப்போதுமே எந்த செய்தியாக இருந்தாலும் அதன் மெய்ப்பொருள் அறிவதில் நிச்சயமற்ற தன்மையே இருக்கும். இளவரசர் பிலிப் இறப்பின் போது இளவரசர் ஹரி என்ன செய்துகொண்டிருந்தார் என்பதிலுமா சர்ச்சை.

பிரித்தானியாவின் இளவரசரான பிலிப் இறந்த செய்தியினை தொலைபேசி வாயிலாக அமெரிக்காவில் வாழும் இளவரசர் ஹரிக்கு கூற அழைத்தபோது, அவர் பதில் பேசவில்லையாம்.

இதன் காரணத்தினால் அவருடைய வீட்டிற்கு அமெரிக்க காவல்துறையினர் அனுப்பிவைக்கப்பட்டு தகவல் கூறப்பட்டதாக  புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவின் இளவரசர் பிலிப் மதியம் 12 மணிக்கு இறந்ததாக செய்தி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இளவரசர் ஹரி வாழும் கலிபோர்னியா, பிரித்தானியாவுக்கும் எட்டு மணி நேர வித்தியாசம் என்பதால் இளவரசர் ஹரியை தொலைபேசியில் அழத்தனராம். 

ஆனால், கலிபோர்னியாவில் அப்போது அதிகாலை 3:00 என்பதால் அவர் தூங்கிக்கொண்டு இருந்ததால் இளவரசர் ஹாரி அரண்மனையில் இருந்து வந்த அழைப்புக்கு பதில் அளிக்காத காரணத்தினால் அமெரிக்க காவல்துறையினர் இளவரசர் ஹரி வீட்டிற்கே சென்று அவருடைய தாத்தா இறந்த செய்தியை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், வாஷிங்டன் டிசியில் உள்ள பிரித்தானிய தூதரகமோ, லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகமோ அவ்வாறு காவல் துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளன.

எதுதான் உண்மை? இளவரசரிடம் கேட்டால் சொல்ல மாட்டாரா என்ன ? உயர்தர செய்தி என்றாலும் உப்பிலாமல் கூறமுடியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here