பெய்ஜிங்: சீனாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பில் பிறப்பு விகிதம் சரிவாக உள்ளமையால், சீன தம்பதியினர் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்வதற்கு அனுமதிப்பதாக சீனா அறிவித்துள்ளது.
சீனா தனது பல தசாப்த கால ஒரு குழந்தைக் கொள்கையை 2016 இல் ரத்து செய்தது, அதற்கு பதிலாக தம்பதியினருக்கு இரண்டு குழந்தை என்று மாற்றியது, இதன் பிற்பாடு கூட பிறப்பு விகிதத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
எனவே பிறப்பு விகிதத்தினை அதிகரிப்பதற்கு சீன அரசு தனது கட்டுப்பாட்டினை ஒரு தம்பதியினருக்கு 3 குழந்தைகள் என்ற விகிதம் குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவித்துள்ளது.