பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது காதலியான கேரி சைமண்ட்ஸ் உடன் ரகசிய திருமணமா?

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த சனிக்கிழமை (மே 29) தனது நெடுநாள் காதலியான கேரி சைமண்ட்ஸை மணந்தார் என்று பிரித்தானிய பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டது.

ஆட்சியில் இருக்கின்றபோது திருமணம் செய்துகொண்ட இரண்டாவது பிரிட்டிஷ் பிரதமர் இவராவார். தற்போது இங்கிலாந்தில் நடைமுறையிலுள்ள கோவிட் -19 கட்டுப்பாடுகள் காரணமாக 30 பேருக்கு மட்டுமே திருமணங்களில் பங்கேற்க்க அனுமதி என்பதால்,”இந்த ஜோடி அடுத்த கோடையில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தங்கள் திருமணத்தை கொண்டாடுவார்கள்” என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் போரிஸ் ஜான்சன்( 56) மற்றும் சைமண்ட்ஸ்(33) ஆகியோர் 2019 இல் ஜான்சன் பிரதமரானதிலிருந்து ஒன்றாக வசித்து வருகின்றனர் என்பதுடன் இத் தம்பதியினருக்க்கு வில்பிரட் லாரி நிக்கோலஸ் ஜான்சன் 2020 இல் பிறந்த ஒரு மகனும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here