11 நாடுகளுக்கான தடையை நீக்கியது சவுதி அரேபியா:

 –இந்தியா நிலை என்ன?

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு சில நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ள நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நாடுகளின் மீதான தடையை நீக்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக சவுதி அரேபியா தங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 20 நாடுகளில் இருந்து பயணிகள் வர தடை விதித்தது.

இந்தியா பாகிஸ்தான் அர்ஜென்டினா பிரான்ஸ் உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு வருவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் தடை விதித்துள்ள நிலையில் தற்போது அதில் 11 நாட்டினர் தடையை சவுதி அரேபியா நீக்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், அயர்லாந்து, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்வீடன், பிரான்ஸ், ஜப்பான், ஸ்விட்சர்லாந்து நாட்டினர் சவுதி அரேபியாவுக்கு வருகை தரலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் சவுதி வரும் பயணிகள் தங்களுடைய சொந்த செலவில் ஏழு நாட்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதன்பின்னர் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே அவர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்தியா பாகிஸ்தான் உள்பட ஒன்பது நாடுகளின் தடை தொடர்ந்து நீடிப்பதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here