சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 60 வயதைக் கடந்த முதியவர்கள் ஏதாவது ஒரு கொவிட்-19 தடுப்பூசி நிலையத்திற்கு சென்று உடனே தங்களுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளனார்.
இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத முதியோருக்குச் சிறப்புச் சலுகையாக தான் இதை அறிவிப்பதாக அவர் கூறினார். அந்த வயதுப் பிரிவினரைப் பொறுத்தவரை முன்பதிவு தேவையில்லை என்று கூறினார்.
மேலும் சிங்கப்பூரில் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்துவதற்கான முயற்சிகளை நாடு செய்துவருவதாகவும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அடுத்த கட்ட முயற்சிகளையும் பிரதமர் நேற்று வழங்கிய தொலைக்காட்சி உரையில் விவரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.a