சளிக்காய்ச்சலுக்குப் போடுவதைப் போல கொரோனா தொற்றுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட வேண்டிய நிலை ஏற்படலாம்

கொவிட்-19 கிருமி சமூகத்துடன் நிரந்தரமாகும் சூழ்நிலை தோன்றுவதால், சளிக்காய்ச்சலுக்குப் போடுவதைப் போல கொரோனா தொற்றுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட வேண்டிய நிலை ஏற்படலாம் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

‘கொவிட்-19 உடன் வாழ்க்கை; சிங்கப்பூரின் புதிய இயல்புநிலை’ எனும் தலைப்பில் நிபுணர்கள் சிலர் பங்கேற்ற கலந்துரையாடலில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், சோ சுவீ ஹாக் பொதுக் கொள்கைக் பள்ளியின் தலைவர் பேராசிரியர் டியோ யிக் யிங், ‘ஏ*ஸ்டார்’ தொற்றுநோய் ஆய்வகங்களின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் லிசா இங், சிங்கப்பூர் மருந்தக ஆய்வு, புத்தாக்கக் கூட்டமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் டேனி சூன் ஆகியோர் அந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் சிங்கப்பூரின் எச்சரிக்கையான அணுகுமுறையை பேராசிரியர் டியோ வலியுறுத்திப் பேசினார். அவர் மேலும் தெரிவிக்கையில் “மக்கள்தொகை, தலைவிகிதக் கணக்கு அடிப்படையில் பார்க்கும்போது, கடந்த மாதம் பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் பதிவான தொற்று பாதிப்புகளைக் காட்டிலும் பத்து மடங்கு குறைவாகச் சிங்கப்பூரில் பதிவாகியது,” என்றும் கோவிட் தொற்றுக் காலகட்டத்தில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் மக்களை அதிகளவில் ஒன்றுகூட அனுமதிக்கவும் ஏதுவான வகையில் கிருமிப் பரவல் குறைந்திருப்பதாக அமெரிக்காவும் பிரிட்டனும் கருதின.

ஆனால், உணவகங்களில் அமர்ந்து உண்ணத் தடை, மாணவர்கள் வீட்டில் இருந்தபடி கற்றல் என்பன போன்ற வழிகளில் சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு “ஒரு கட்டத்தில், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான தேசிய தடுப்பூசி அட்டவணையில் கொவிட்-19 தடுப்பூசியும் சேர்க்கப்படலாம். ஒருவேளை, குறிப்பாக புதிய, உருமாறிய கொரோனா கிருமிகளிடம் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வதை உறுதிசெய்ய, அவ்வப்போது நாம் ‘செயலூக்கி (booster)’ தடுப்பூசிகளைப் போட வேண்டிய தேவை ஏற்படலாம்,” என்றும் கூறினார்.

மேலும் புதிது புதிதாக கொரோனா திரிபுகள் உருவெடுப்பதால் இன்னும் நிச்சயமற்ற நிலையே காணப்படுகிறது. ஆதலால், அவ்வப்போது சளிக்காய்ச்சல் தடுப்பூசிகளைப்போல, வெவ்வேறு புதிய உருமாற்ற கொரோனா கிருமிகளுக்குப் பின் மேம்படுத்தப்படும் செயலூக்கித் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்றும்
கொரோனா பரவலை முற்றக இல்லாதொழிக்க இன்னும் வெகுகாலம் ஆகலாம் என்றும் பேராசிரியர்கள் குழு தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here