சீனாவின் சினோவாக் தடுப்பூசி

 WHO  அமைப்பு ஒப்புதல்..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், பல நாடுகளில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு, சீனாவின் சினோவாக் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

ஏற்கனவே, உலக சுகாதார அமைப்பு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இது உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலை பெற்ற சீனாவின் இரண்டாவது கொரோனா தடுப்பூசி ஆகும்.

இந்நிலையில், சினோவாக் தடுப்பூசியை சீனாவை தவிர்த்து, பிரேசில்,. சிலி, இந்தோனேசியா, மெக்சிகோ, தாய்லாந்து, துருக்கி ஆகிய நாடுகள் பயன்படுத்துகிறது. பைசர், மாடர்னா ஜான்சன் அண்ட் ஜான்சன், அஸ்ட்ரா ஜெனகா ஆகிய தடுப்பூசிகளுக்கு, உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here