தடுப்பூசிக்கு அதிரடி பரிசுகள்

10 லட்சம் டாலர் ரொக்கம், துப்பாக்கி, கார்... அறிவித்தது கிழக்கு வெர்ஜினியா!

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த தொற்றால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது.

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்தாலும் அனைத்து நாடுகளும் அதிகம் நம்புவது தடுப்பூசியைத் தான். கொரோனாவின் அடுத்த அலை அடிப்பதற்குள் நாட்டு மக்களை கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்புக்குள் கொண்டு வர வேண்டுமென அரசுகள் நினைக்கின்றன.

இதனால் மக்களிடையே தடுப்பூசியை கொண்டு செல்ல தீவிரமாக வேலை செய்கின்றன. இந்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களின் ஆர்வத்தை தூண்டுவதற்காக அதிரடி பரிசுகளை அறிவித்துள்ளது அமெரிக்காவின் கிழக்கு வெர்ஜினியா.

பரிசுகள் என்றால் அரைகுறையான பரிசுகள் அல்ல, துப்பாக்கிகள், ட்ரக் வகை கார், பத்து லட்சம் டாலர் ரொக்கம், கல்லூரி ஸ்காலர்ஷிப், இலவச பியர்கள் என அதிரடியான பரிசுகள் தான். குலுக்கல் முறையில் இந்த பரிசுகள் கொடுக்கப்பட உள்ளன.

இந்த அதிரடி பரிசுத்திட்டம் குறித்து பேசிய கிழக்கு வெர்ஜினியா கவர்னர் ஜிம், ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இந்த தடுப்பூசி நிகழ்ச்சியை நடத்த உள்ளோம். மக்கள் வேகமாக தடுப்பூசி எடுத்துக்கொண்டு நாட்டையும், மக்களையும் காக்க வேண்டும். என்றார். அரசின் பரிசுத்திட்ட அறிவிப்புக்கு பிறகு பொதுமக்கள் ஆர்வமாக தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here