இந்திய- அமெரிக்கா கூட்டு நடவடிக்கை

போதைப்பொருள் கடத்தலைத்  தடுக்க தீவிரம்!

நெடுங்காலமாகவே தனி சாம்ராஜ்ஜியமாக உலகை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும்  போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்படாத  ஒன்றாகவே இன்னும் இருந்து வருகிறது. இதற்கு என்ன காரணம் தான் என்ன?

நாடுகளுக்கிடையே புரிந்துணர்வும் ஒத்துழையாமையுமே முதற்காரணமாக இருக்கிறது என்பது தெரிந்த ஒன்றுதான் . அதற்கான நடவடிக்கை செயலுக்கு வராத வரை இதற்கு முடிவே கிடையாது. 

நியூயார்க்:

சட்ட விரோதமாக போதைப் பொருள் கடத்தப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இந்தியா – அமெரிக்கா இரு நாடுகளும் புரிந்துணர்வுடன் இப்போது கூட்டு சோந்து ஈடுபட முடிவு செய்துள்ளன.

இதுதொடா்பாக இரு நாடுகளுக்கு இடையே இணையவழியில் நடைபெற்ற கூட்டத்தில், ஒருங்கிணைந்த திட்டத்தை வகுக்க முடிவு செய்யப்பட்டது.


மேலும், போதைப் பொருள் கடத்தல் தொடா்பான தகவல் பரிமாற்றம், படிப்பினைகள், பொது சுகாதார பாதிப்புகள் ஆகியவற்றை இருநாடுகளும் பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவின் சார்பில் போதைப் பொருள் தடுப்பு அமைப்பின் தலைவா் ராகேஷ் அஸ்தானா, அமெரிக்காவின் தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு திட்டக் குழுவின் துணை இயக்குநா் கெம்ப் செஸ்டா் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

இதில் சட்ட விரோதமாக போதைப் பொருள்கள் தயாரிப்பு, கடத்தல், விநியோகம் ஆகியவற்றை தடுக்க இருநாடுகளும் ஒன்றுசோந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தெற்காசிய பகுதியில் இந்தியாவின் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் எல்லைத் தாண்டிய கடத்தலைத் தடுக்க உளவுத் தகவல்கள் பரிமாறுதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here